Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

எந்த இனத்துக்கும் அநீதி இழைப்பதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை - நாம் நாட்டை ஆட்சி செய்வோர்களல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாட்டுக்கான சேவையாளர்கள் -சஜித் பிரேமதாச

எமது நாட்டின் இனங்களுக்கிடையில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு இனத்திற்கும் அநீதி இழைக்கப்படுவதை நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. பாதுகாப்பு என்பது சகலருக்கும் ஒருவிதமானதாகத்தான் அமையும் என தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேசிய பாதுகாப்பு என்ற எனது கருத்து ஒரு சமுகத்தை மட்டும் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் ஒரு திட்டமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜா-எல நகரில் நேற்று முன்தினம் இரவு (24) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச, இந்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு பிரஜையும் அரசியலமைப்பு ரீதியில் ஒரு விதமாகத்தான் உள்வாங்கப்படுகிறார்கள். எவருக்கும் தனியான சிறப்பு உரிமை எதுவும் கிடையாது. நான் அனைவரையும் இலங்கை பிரஜையாகவே பார்க்கின்றேன். இன ரீதியாகவோ மத ரீதியாகவோ யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்க விரும்பவில்லை.

எங்களுக்குத் தேவை சுவீட்சமான ஒரு நாட்டை உருவாக்குவதே. உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இரண்டாம் தரமாக வாழ்வதற்கு நாம் விரும்பவில்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் வறுமை கோட்டிலுள்ள மக்களை எட்டவில்லை. அவர்கள் தொடர்ந்தும் வறுமை கோட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பொருளாதார ஆய்வு முடிவுகளின்படி எமது நாட்டில் வளமான வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு அவசியமான வருமானத்தை நாட்டு மக்கள் தொகையில் 45 சதவீதமானோர் பெற்றுக்கொள்வதில்லை எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும் வரி அதிகரிப்பாலும் பாரிய சுமையை மக்கள் சுமந்து கொண்டிருக்கும் நிலையில் நான் பதவியேற்றதும் மிக குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் அதனை சாதாரண மக்களும் உணரக்கூடிய நிலையை உருவாக்குவேன். எமது மக்கள் இன்னொருவர் கைகளில் தங்கி நிற்கும் நிலை இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமமான சகல உரிமைகளும் கிட்டவேண்டும்.

எதிர்காலத்தில் நாட்டின் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்போது நாட்டு மக்களை முன்னிறுத்தி சிந்தித்து வரிச் சுமையிலிருந்து விடுபடும் ஒரு நிலையை ஏற்படுத்துவேன். எம்மிடம் நிதி இல்லையென்று எவரும் கூறமுடியாது உண்மையிலேயே போதுமான அளவிற்கு நிதி வசதியுண்டு. 

ஆனால் ஜனாதிபதி என்ற கதிரைக்கு சென்ற உடன் அரச திறைசேரியை குடும்பத்தின் உடமையாக்கிக் கொள்ளும் கலாசாரமொன்றே உருவாகியிருந்தது. நாட்டின் அரச சொத்துக்கள் அனைத்தும் பொது மக்களுக்கே சொந்தமானது. அரசியல் வாதிகளுக்குச் சொந்தமானதல்ல. 

எனவே நாம் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தவோ மாட்டோம். நாம் நாட்டை ஆட்சி செய்வோர்களல்ல. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்களால் குறிப்பிட்ட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாட்டுக்கான சேவையாளர் மட்டுமே. மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொண்டு சேவை செய்வதே என் மீதான கடப்பாடாகும்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் வாதிகளுக்கு புதிய வாகனங்கள், வீடுகள் வழங்கப்படும். ஆனால் நான் ஜனாதிபதியானதன் பின்னர் எக்காரணம் கொண்டும் வெளிநாடுகளிலிருந்து எனது பாவனைக்காக குண்டு துளைக்காத வாகனங்களை பெற்றுக் கொள்ள மாட்டேன். 

அரசியல் வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு பாராளுமன்றத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யமாட்டேன். இந்த பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதென்பது உண்மையிலேயே மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களுக்கும் சேவையாற்றி நாட்டுக்கும் சேவையாற்றுவதேயாகும். இதனை உணர்ந்த எவரும் என்னோடு இணைந்து செயற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்