மாவடிப்பள்ளி, இறக்காமம் உட்பட பிரதேசங்களில் அதிகளவிலான முதலைகள்!!!

அம்பாறை - காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும்
 ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால் மக்கள் குறித்த பாதையில்  செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.


அண்மைக் காலமாக பெய்து வரும் மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.


குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான சுமார் 9, 5, 4 அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் அம்பாறை மாவட்டத்தில் கிட்டங்கி, அன்னமலை, மாவடிப்பள்ளி, இறக்காமம், சின்ன முகத்துவாரம், சாகாமக்குளம், கஞ்சிகுடிச்சாறு, தாமரைக்குளம், பொத்துவில் களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றன.


மேற்படி பகுதிகளில் உள்ள வாவிகள் குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனினும் ஆறுகளிலும் குளங்களிலும் நீர்நிலைகளிலும் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்தல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. 


முதலை அபாயம் தெரியாமல் மீனவர்களும் சுற்றுலாப்பயணிகளும் வாவிகளிலும் குளங்களிலும் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.


-சம்மாந்துறை நிருபர்

கருத்துகள்

popular posts

ரிஷாதும் ஹக்கீமும் வட, கிழக்குக்கு வெளியே தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது

மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2014ல் அங்கிகரிக்கப்பட்ட கெசட்டை வைத்து கல்முனையை அபிவிருத்தி செய்வோம்.

இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - பிரதமர்