த‌மிழ் த‌ர‌ப்பு ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் யாருக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌து என்று முடிவெடுத்துவிட்டார்கள்

த‌மிழ் த‌ர‌ப்பு ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் யாருக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌து என்று முடிவெடுக்க‌வில்லை என‌ சொல்லிக்கொண்டாலும் அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் ஏற்க‌ன‌வே முடிவு செய்து விட்டார்க‌ள்.
தொண்ட‌மான், பிள்ளையான், ட‌க்ள‌ஸ் போன்றோர் கோட்டாவுக்கு என‌ அறிவித்து விட்ட‌ன‌ர்.
ம‌னோ, திகா போன்றோர் ச‌ஜித்துக்கு என‌ அறிவித்து விட்டார்கள்.
த‌மிழ் கூட்ட‌மைப்பு யாருக்கு என‌ அறிவிக்காவிட்டாலும் அத‌ன் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ச‌ஜித்துக்கு வாக்க‌ளிப்ப‌தே ந‌ல்ல‌து என‌ கூறிவ‌ருகிறார்க‌ள். விரைவில் ச‌ஜித்துக்கான‌ அறிவிப்பை வெளியிடுவ‌ர்.

ஆக‌ மொத்த‌த்தில் த‌மிழ் த‌ர‌ப்பின‌ர் த‌ம் முடிவை அறிவித்து விட்ட‌ன‌ர் என்ப‌தே உண்மை.

அதே போல் முஸ்லிம் க‌ட்சிக‌ளும் அறிவித்து விட்ட‌ன‌.  முஸ்லிம் காங்கிர‌சை ந‌ம்பி 19 வ‌ருட‌மாக‌ ஏமாறும் கூட்ட‌ம் ச‌ஜித்துக்கு வாக்க‌ளிக்கும். அர‌சிய‌லில் உண்மையை பேசும் தேசிய‌ காங்கிர‌ஸ், உல‌மா க‌ட்சி போன்ற‌வ‌ற்றின் க‌ருத்துக்களை ஏற்றோர் கோட்டாவுக்கு வாக்க‌ளிப்ப‌ர்.
ச‌ஜித் வ‌ந்தால் இந்த‌ நால‌ரை வ‌ருட‌மும் அடி வாங்கிய‌ போது "முதுகெலும்பில்லாத‌ இந்த‌ ஆட்சிக்கு பாட‌ம் புக‌ட்டுவோம்" என‌ ஹ‌க்கீம் த‌ர‌ப்பு  புல‌ம்பிய‌து போல் ஒப்பாரி வைக்க‌ வேண்டிய‌துதான்.
முஸ்லிம்க‌ளின் வாக்கு ப‌ல‌த்தினால் கோட்டா வென்றால் நிச்ச‌ய‌ம் இன‌வாத‌த்தை குறைக்க‌ முடியும் என்ப‌தே எம‌து க‌ருத்து.
எதிர் கால‌ம் எப்ப‌டி இருக்கும் என்ப‌து இறைவ‌னுக்கு ம‌ட்டுமே தெரியும். ஆனாலும் இந்த‌ நால‌ரை வ‌ருட‌ ச‌ஜித் அமைச்ச‌ராக‌ இருக்கும் இந்த‌ ஆட்சியில் முஸ்லிம்க‌ளுக்கு ந‌ன்மை கிடைத்த‌தாக‌ உறுதியுள்ள‌வ‌ர்க‌ள் ச‌ஜித்துக்கு வாக்க‌ளிக்க‌லாம். முஸ்லிம்க‌ளில் 90 வீத‌ம் ம‌ஹிந்த‌வுக்கு வாக்க‌ளித்திராத‌ நிலையிலும் ம‌ஹிந்த‌ ஆட்சி முஸ்லிம்க‌ளுக்கு 90 வீத‌ம் சாத‌க‌மாக‌ இருந்த‌து என்ப‌தை புரிந்த‌வ‌ர்க‌ள் கோட்டாவுக்கு வாக்க‌ளிக்க‌லாம்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்