ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
நேற்றிரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த (6079 இலக்க) பயணிகள் ரயில் வண்டி அவுக்கண-கலாவெவ இடையே தடம்புரண்டள்ளது.
குறித்த புகையிரதமானது அங்கிருந்த பாலம் ஒன்றை கடக்க முன்னர் இந்த விபத்து விபத்து ஏற்பட்டதால் சுமார் 250 பயணிகள் பேராபத்திலிருந்து மீண்டுள்ளனர்.
இல்லையெனில் பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.
நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் பயணிகள் எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை.
எனினும் ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்ததுடன் மரத்திலாலான சிலிப்பர் கட்டைகள் என்பன உடைந்து சேதடைந்துள்ளது
Comments
Post a comment