மானமுள்ள சாய்ந்தமருது மக்கள்!!!

மானமுள்ள சாய்ந்த மருது மக்களே…..பல போராட்டங்களுக்கு மத்தியில் நீங்கள் தலைவனாக்கிய முஸ்லிம் காங்கிரசின் தலைவனை கொழும்புக்கு சந்திக்க சென்று பல மணித்தியாலங்கள் காத்திருந்தும் அவர் உங்களுக்கு தரும் மரியாதை இதுதான். ஒரு நிமிடம் கூட உங்களை நின்று கொண்டாவது பதிலலிப்பதற்கு அவருக்கு மனமில்லை. இதில் எனது அன்புக்குறிய ஆசான் ஹனிபாவின் நிலையை பார்க்கின்ற பொழுது உள்ளம் வலிக்கின்றது. இது சாய்ந்தமருது மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த கிழக்கு மக்களையும் தேர்தல் முடிந்த கையோடு அவர் பார்ப்பது இவ்வாறுதான்.


இதனை கிழக்கு மக்கள் உணர்ந்தும் இன்னும் மெளனம் காப்பதும் , ஆதவன் பாட்டை கேட்டதும் உணர்ச்சி பொங்குவதும் வேதனையிலும் வேதனை. கிழக்கில் உள்ள படித்தவர்களே, பல்கலைகழக மாணவர் சமூதாயமே, விளையாட்டுக்கழக உறுப்பினர்களே, சமூக சேவையாளர்களே, இளைஞர்களே, இனியாவது சிந்தியுங்கள்..உங்களுடைய எதிர்கால சந்ததியினரின் நிம்மதியான வாழ்விற்கு சமூகத்தினை பற்றி சிந்திக்க கூடிய, எமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பற்றி அறிந்த, எமக்காக சிந்திக்க கூடிய சிறந்த அரசியல் தலைமையின் கீழ் நாம் ஒன்று பட காலத்தின் கட்டாய தேவையில் இருக்கின்றோம்.

கட்சி என்அது எமக்கௌ மார்க்கமும் அல்ல கிப்லாவும் அல்ல. அது எமது அடிப்படை உரிமை சம்பந்தமான அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு ஜனநாயக வழியில் நாம் தெரிவு செய்துள்ள ஒரு பாதையாகும். அந்த பாதையில் எம்மை வழி நடாத்துபவன் சுயநல வாதியாகவும், தேர்தல் முடிந்த கையோடு எமது தலையில் மிளகாய் அரைக்கலாம் என்ற தப்புக்கணக்க்கோடு தான் ஒரு மிகப்பெரிய சானக்கியன் என எம்மீது நெருப்பினை மூட்டி அதில் குளிர்காய நினைக்கும் தலைமையின் கீழ் இன்னும் நாம் பயனித்து எமது எதிர்கால சந்தியினரை படுகுழியில் தள்ளிவிடும் முடிவா.! எமது இறுதி முடிவென்பதனை நாம் சிந்தித்து இறுதி முடிவெடுக்க வேண்டிய கடைசி நிமிடத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். என்பதனை மறந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களையும், என்னையும், எமது சமூகத்தினையும் இவர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.
-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்