கோட்டாப‌ய‌ வெற்றி பெற்றால் இந்த‌ அர‌சாங்க‌த்தின் அமைச்ச‌ர‌வையால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ திருத்த‌த்தை மூன்று மாத‌த்துள் பாராளும‌ன்றில் ச‌ம‌ர்ப்பிக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுப்பேன் - பைசர் முஸ்தபா

கோட்டாப‌ய‌ வெற்றி பெற்றால் இந்த‌ அர‌சாங்க‌த்தின் அமைச்ச‌ர‌வையால் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌ திருத்த‌த்தை மூன்று மாத‌த்துள் பாராளும‌ன்றில் ச‌ம‌ர்ப்பிக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுப்பேன் என முன்னாள் அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா தெரிவித்தார்.
இன்று ந‌டைபெற்ற‌ ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பின் போது அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌த்தில் ந‌டை பெற்ற‌ அளுத்க‌ம‌ போன்ற‌ பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ அந்த‌ அர‌சாங்க‌த்தை மாற்றுவ‌த‌ற்கு முத‌லில் முன் வ‌ந்த‌வ‌ன் நானாகும். கார‌ண‌ம் நான் எப்போதுமே ச‌மூக‌த்தை நேசிப்ப‌வ‌ன். ஆனாலும் அந்த‌ அர‌சாங்க‌த்தை மாற்றி ஐ தே க‌ த‌லைம‌யிலான‌ இந்த‌ அர‌சை நாம் கொண்டு வ‌ந்த‌ போது இந்த‌ அர‌சு க‌ட‌ந்த‌ அர‌சை விட‌ மிக‌ மோச‌மான‌ அர‌சாக‌ இருந்த‌தை க‌ண்டோம். இந்த‌ அர‌சில் அம்பாரை ப‌ள்ளி உடைப்பு, திக‌ன‌ க‌ண்டி என‌ ப‌ல‌ தாக்குத‌ல்க‌ளுக்கு முக‌ம் கொடுத்தோம். இத்த‌னைக்கும் முழு முஸ்லிம் எம் பீக்க‌ளும் அமைச்ச‌ர்க‌ளும் இந்த‌ அர‌சில் இருந்தும் முஸ்லிம்க‌ளை பாதுகாக்க‌ முடிய‌வில்லை. மாற்ற‌த்தை எதிர் பார்த்த‌ முஸ்லிம்க‌ள் மூர்க்க‌த்தையே க‌ண்டன‌ர்.
ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கு பின் முஸ்லிம் ச‌மூக‌ம் பாரிய‌ ப‌ல‌ பிர‌ச்சினைக‌ளுக்கு முக‌ம் கொடுத்த‌து. பெண்க‌ள் உடைக‌ளுக்கு க‌ட்டுப்பாடு, அர‌ச‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு முஸ்லிம் பெண்க‌ள் த‌ம‌து க‌லாசார‌ ஆடையை அணிந்து செல்ல‌ முடியாமை, முஸ்லிம் வியாபார‌ நிலைய‌ங்க‌ளில் பொருள் வாங்க‌ முடியாம‌ல் த‌டுத்த‌மை என‌ ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌. இத்த‌னைக்கும் அர‌சாங்க‌த்துக்கு முழு ப‌ல‌மும் இருந்தும் முஸ்லிம்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

இந்த‌ அர‌சு மாற்ற‌த்தில் முஸ்லிம்க‌ள் எந்த‌ ந‌ன்மையையும் அடைய‌வில்லை. இந்த‌ நிலையில் ச‌மூக‌த்தின் பிர‌ச்சினைக‌ளை சுட்டிக்காட்டி ப‌த‌விக‌ளை ராஜினாமா செய்த‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் ச‌மூக‌த்தின் எந்த‌ பிர‌ச்சினையும் தீராம‌ல் மீண்டும் ப‌த‌விக‌ளை ஏற்ற‌ன‌ர்.

முஸ்லிம்க‌ளுக்கு பாதுகாப்பு முக்கிய‌ம். ஆனால் ஐ தே க‌ அர‌சால் முஸ்லிம்க‌ளை பாதுகாக்க‌ முடியாது என்ப‌தே உண்மை. நாட்டின் வ‌ர‌லாற்றை பார்க்கும் போது ஐ தே க‌ ஆட்சியிலேயே சிறுபான்மை ம‌க்க‌ள் அதிக‌ பாதிப்பை க‌ண்ட‌ன‌ர்.


இன்று 19 பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ச‌ஜித்தின் ப‌க்க‌மும் நானும் காத‌ர் ம‌ஸ்தானுமே கோட்டா ப‌க்க‌ம் நிற்கிறோம். முஸ்லிம் ச‌மூக‌ம் இரு ப‌க்க‌மும் நிற்ப‌தே ந‌ம‌க்கு பாதுகாப்பாகும். அந்த‌ வ‌கையில் முஸ்லிம் ம‌க்க‌ளும் இரு த‌ர‌ப்பாக‌ நின்று கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கும் வாக்க‌ளிக்க‌ வேண்டும்.

2015ல் முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளால் அர‌சாங்க‌ம் மாறிய‌து. இம்முறை அப்ப‌டி முடியாது.  இந்த‌ நிலையில் முஸ்லிம்க‌ளால் ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ர் ஒருவ‌ர் தோற்றார் என்ற‌ அப‌ச்சொல் ந‌ம‌து ச‌மூக‌த்துக்கு வ‌ர‌க்கூடாது. என்னை பொறுத்த‌வ‌ரை கோட்ட‌ப‌யாவினால் நிச்ச‌ய‌ம் சமூக‌ம் பாதுகாப்பை பெற‌முடியும் என்ப‌தை என்னால் உறுதியாக‌ கூற‌ முடியும்.

மேற்ப‌டி ஊட‌க‌ மாநாட்டில் அல்ஜ‌ஸீறா ல‌ங்கா ஊட‌க‌ ஆசிரிய‌ரும் உல‌மா க‌ட்சி த‌லைவ‌ருமான‌ முபாற‌க் மௌல‌வியும் க‌ல‌ந்து கொண்டிருந்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்