நான் சொன்னதை செய்வேன் -சாய்ந்தமருது மக்களுக்கு மகிந்த வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை மாநகர சபை சுயேச்சை குழு உறுப்பினர்கள் இன்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்சவை இன்று ஹம்பாந்தோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது சாய்ந்தமருது நகரசபை விடயம் பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் கோட்டா வெற்றியுடன் சாய்ந்தமருது பிரதேசத்தை நகரசபையாக மாற்றி தருவதாக நான் சொன்னால் சொன்னது தான் என மகிந்த ராஜபக்ச இக் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 26திகதி மாலை சாய்ந்தமருதிற்கு வருகை தர உள்ளதாகவும் மக்கள் முன் இந்த விடயத்தை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை மாநகர சபை சுயேச்சை குழு உறுப்பினர்கள் கடந்த வாரம் சஜித்பிரேமதாசாவுடன் நடைபெற்ற கூட்டம் தோல்வி அடைந்ததை அடுத்தே மகிந்தவை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்