அடைமழை... மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செங்கலடி 
- பதுளை வீதியின் போக்குவரத்து இன்று (29) அதிகாலை முதல் தடைப்பட்டுள்ளது.

செங்கலடி – பதுளை வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் கோப்பாவெளியில் பாலம் நிர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட மாற்று வீதி வெள்ளத்தினால் பாதிக்க்பபட்டதன் காரணமாக போக்குவரத்துக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந. வில்வரெடனம் தெரிவித்தார்.

இதன் காரணமாக செங்கலடி பதுளை வீதியினூடாக தூரப் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மாற்றுவழியினைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தும்பானஞ்சோலை பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு நீர் வெலிக்காகண்டியை ஊடறுத்துச் செல்வதால் மாற்றுவழிப் பாதை சேதமடைந்துள்ளது.

குறித்த பகுதியில் நீரோட்டாம் அதிகமாக உள்ளதனால் வீதியின் செப்பனிடும் பணிகள் தடைப்பட்டுள்ளன.

Comments

popular posts

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா