ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான பயணத்தடை நீக்கம்

இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதித்த பயணத்தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகம் மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சின் செயலாளருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளை அறிவுறுத்தி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, குறித்த டுவீட் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Nfirst

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்