ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
மற்றும் ஓய்வுபெற்ற பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் வெற்றிபெற்ற பின்னர் தன்னுடைய முதல் நியமனம் சரத் பொன்சேகா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அரசாங்கம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை பாதுகாத்த உண்மையான இராணுவ வீரர்கள் தன்னுடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீடியோ Link :
https://youtu.be/_QRvaeE5Wak
Comments
Post a comment