ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
தமக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை கண்டி வைத்தியசாலைக்கு வக்பு செய்தனர் கண்டி 'முஸ்லீம் ஹோட்டல்' குடும்பத்தார்.
கண்டி போதனா வைத்தியசாலை, இன்று முதல் இலங்கையின் இரண்டாவது
தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, மத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது விஷேட நிகழ்வாக, ஒரு முஸ்லிம் குடும்பத்தினரால், தமக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கரும் 40 பர்சஸ் பரப்பளவு காணியை வைத்தியசாலை உபயோகத்துக்காக அரசாங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்தக் காணி, கண்டி பிரதான நகரில் அமைந்துள்ள 'முஸ்லீம் ஹோட்டல்' உரிமையாளர்களுக்கு சொந்தமானதாகும்.
அல்லாஹுத்தஆலா அவர்களது குடும்பத்தாருக்கு மேலான சொர்க்கத்தை நசிப் ஆக்குவானாக.
மடவலை நியூஸ்
– அல் ஹாஜ் சித்திக்
Comments
Post a comment