புத்தளம் குப்பை பிரச்சினையை, நானே நேரடியாக தீர்த்து வைப்பேன் - உறுதியளித்தார் சஜித்

- புத்தளத்தில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -     

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியானதும் புத்தளம் அறுவக்காட்டு குப்பை பிரச்சினைக்கு  தீர்வினை பெற்றுத்தருவதுடன்,இந்த பிரச்னைக்கான தீர்வை எவ்வித குழுக்களிடத்தில் ஒப்படைக்காமல் நேடியாக நின்று  தீர்த்து தருவதாக  உறுதியளித்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று அரசாங்கத்தில் அமைச்சராக நான் இருப்பதற்கு காரணமான புத்தளம் தொகுதி மக்களுக்கு ஒரு போதும் அநியாயம் இழைக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் சூளுரைத்தார்.

புதிய ஜனநாக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இன்று  புதன்கிழமை இடம் பெற்றது.புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன்,இராஜாங்க அமைச்சர் ரன்ஞன் ராமநாயக்க,பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித

ரங்கபண்டார,முஜிபுர் ரஹ்மான்,ஹிருணிகா பிரேமசந்திர,முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்தில் வேட்பாளர் சஜித் பிரேமதாச மேலும் உரையாற்றுகையில் –

இந்த நாட்டில் மக்கள் சுதந்திரமாகவும்,கௌரவமாகவும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது.நாட்டின் தேசிய பாதுகாப்பினை முதன்மையான இடத்தில் வைத்து சகல இனமக்களையும் பாதுகாக்கும் பணியினை நாம் ஆட்சியமைத்ததும் செய்யவுள்ளோம்.

புத்தளம் மாவட்ட மக்கள் ஜக்கிய தேசிய கட்சியின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.எனது தந்தை ரணசிங்க பிரேமதாச இந்த மாவட்ட மக்களின்ால் பெரிதும் நேசிக்கப்பட்ட ஒருவராவார்.குறிப்பாக இன்று இந்த அரசாங்கம் அமைவதற்கு புத்தளம் தொகுதி மக்களின் வாக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.இதனை ஒரு போதும் மறந்து  செயற்படவில்லை.புத்தளம் மக்கள் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினை தொடர்பில் நான் பல கலந்துரையாடல்களை நடத்தியுள்ளேன்.

எனது தேர்தல் வாக்குறுதிகள் என்பது வெறும் வாக்குறுதிகள் அல்ல .அது உயிர்ப்பிக்கப்படும் ஒன்றாகும் புத்தளம் மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் தோறும்  எனது நேரடி கவனம் செலுத்தப்படும்.குறிப்பாக கைத்தொழில்  பேட்டைகள் அமைக்கப்பட்டு இங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளேன்,கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகைளை இனம் கண்டு அதற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி செயலணியினை ஏற்படுத்தி செயலாற்றவுள்ளேன்.இந்த மாவட்டத்தின் சுற்றுலாத் துறையினை மேம்படுத்த பல திட்டங்கள் என்னிடத்தில் உள்ளது சர்வதேச தகவல் தொழில் நுட்பத்தை பிரதேச செயலகங்களுடன் இணைக்கும் திட்டத்தின் மூலம் பிரதேச இளைஞர்கள் சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்தி தமது திறமையினை மேலும் வளர்த்துக்கொள்வார்கள்.

இன்று தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசுகின்றனர்.இந்த நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைத்தவர்கள் யார் என்று மக்கள்  அறிவார்கள்.தேசிய பாதுாப்புக்கு பெரிதும் தடையாக இருக்கும் காரணிகள் தான் இனவாத செயற்பாடுகள்,இதனை இல்லாமல் ஆக்குவதன் மூலம் தேசிய பாதுகாப்பினை வலுப்படுத்த முடியும்,புலனாய்வுத்துறைக்குள் அரசியல் அதிகாரங்கள் செலுத்துவதினால் எதிர்பார்த்த பிரதி பலன்களை மக்களால் பெற்றுக் கொள்ள முடியாத நிலைஏற்பட்டுள்ளது.இத்துறையினை வலுப்படுத்தி சர்வதேச நாடுகள் பின்பற்றும் முறைகள் தொடர்பில் போதுமான அறிவினையும்,பயிற்சியினையும் இவ்வதிகாரிகளுக்கு பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.அதே வேளை பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைக்குள் ஆக்கிரமிப்பு செய்யும் அரசியைலை முற்றாக கலைந்து அதனை சுதந்திரமிக்கதொரு அமைப்பாக செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவேன்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாடு குறித்து திட்டமுள்ளது.இந்த நாட்டில் 40 இலட்சம் மாணவர்கள் உள்ளனர்.இவர்களுக்கு தேவையான பாடசாலை சீருடையினை இரண்டாக வழங்குவதுடன்,மதிய போசன திட்டத்தினையும் நடை முறைக்கு கொண்டுவருவேன் என்றும் ஜனாதிபதி வேட்பாளரும்,அமைச்சருமான சஜித் பிரேமதாச இதன் போது கூறினார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்