ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அடுத்துவரும் தேர்தல்களிலும் போட்டியிட்டு இந்த பயணத்தை தொடர்ந்து முன்னுக்கு செல்வதே எமது இலக்காகும் - மகேஷ் சேனநாயக
எமது கட்சி இந்த தேர்தலுடன் நின்றுவிடுவதில்லை. அடுத்துவரும் தேர்தல்களிலும் போட்டியிட்டு இந்த பயணத்தை தொடர்ந்து முன்னுக்கு செல்வதே எமது இலக்காகும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் நான் தேர்லில் போட்டியிடுவதில் இருந்து விலகி பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவளிக்கப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன. அவ்வாறான எந்த எண்ணமும் எனக்கில்லை. நான் ஒருபோதும் போட்டியிடுவதில் இருந்து விலகப்போவதில்லை.
அத்துடன் எமது கட்சி சிவில் பிரதிநிதிகளைக்கொண்ட கூட்டணியாகும். அரசியல்வாதிகள் யாரும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கமே, தற்போது இடம்பெற்றுவரும் மோசமான அரசியல் கலாசாரத்தை இல்லாமலாக்கி புதிய யுகத்தை ஏற்படுத்துவதாகும். மோசமான அரசியல் கலாசாரம் காரணமாகவே நாடு சுதந்திரமடைந்தது முதல் எந்த அபிவிருத்தியும் இல்லாமல் இருக்கின்றது.
மேலும் இந்த தேர்தலுடன் நாங்கள் நின்றுவிடுவதில்லை. அடுத்துவரும் பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களிலும் போட்டியிட இருக்கின்றோம். இதுவே எமது ஆரம்பம். இதன் பின்னர் எமது கட்சியின் வேலைத்திட்டங்களை பார்த்து எதிர்காலத்தில் இன்னும் பலர் இணைந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. எமது கட்சி பிரபல்லியமடைந்துவரும் கட்சி என்பதால் முன்னணி கட்சி பிரதிநிதிகள் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதற்காக அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவளிக்கப்போவதென தெரிவிக்கமுடியாது என்றும் கூறினார்.
கொழும்பில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் நடவடிக்கை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
-அபு ஹிஷாம்
Comments
Post a comment