கோட்டாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா – கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அது தொடர்பாக தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாரு கோரியும் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்