ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அச்சமற்ற சூழலை உருவாக்க அரச ஊழியர்கள் சிந்தித்து வாக்களியுங்கள்!
மக்களை பலிகொடுத்து முஸ்லிம் கட்சிகள் செய்யும் தரகர் அரசியலில் இருந்து விடுபடுங்கள்!
இலங்கை தாய் நாட்டில் அனைத்து இன மத மொழி பேதம் கடந்து திறந்த மனதுடன் ஒற்றுமைப்பட்டு சிறந்த எதிர்காலம் நிறைந்த தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு அழைக்கிறேன்.
அரச இயந்திரத்தை இயக்குகிற முதுகெலும்பாக திகழ்கிற நீங்கள் எடுக்கும் தீர்மானம் கடந்த ஆட்சியில் இந்த நாடு கண்டுகொண்ட அனர்த்த நிலையில் இருந்து விடுவிக்கும் வகையில் அமைதல் வேண்டும். குறிப்பாக வட கிழக்கு வாழ் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தென்னிலங்கை பூராவும் பரந்து வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும்.
மக்களை பலிகொடுத்து முஸ்லிம் கட்சிகள் செய்யும் தரகர் அரசியலில் இருந்து விடுபடுங்கள். ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவிட்டு முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை சூறையாடும் மிலேச்சத்தனமான தாக்குதலை விடியற்காலை வந்து சம்பவத்தை பார்த்துவிட்டு கண்டன அறிக்கையோடு காலம் கடத்தும் இழிநிலை அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பிடியில் இருந்து விடுபடுங்கள்.
பெரும்பான்மை சமூகத்தினால் முழுமையாக அங்கீகாரம் பெற்ற அரசோடு இணைந்து நமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி சகவாழ்வுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்க இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்துங்கள்.
நாளை தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது ஆனால் இதுவரைக்கும் ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட முடியாத வக்கற்ற நிலை சஜித் பிரேமதாசவுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். படித்தவர்கள் நீங்கள் கட்சிகளின் வேட்பாளர்களின் கொள்கைகளை எதிர்கால திட்டங்களை அலசி ஆராய்ந்து பார்க்காமல் கண்மூடித்தனமாக வாக்களியுங்கள் என்று கூறுகிறார்கள். இவர்களிடம் எதுவித திட்டங்களும் இல்லை பொருளாதார கொள்கைகள் இல்லை நாட்டின் மக்கள் குறித்து தெளிவான பார்வை இல்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள்.
சிறந்த தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் இது
சிங்கள சமூகம் முஸ்லீம் சமூகத்தினை சந்தேக கண்கொண்டு பார்க்கும் விதத்தில் நமது தலைவர்கள் சொந்த அரசியல் சுயலாபத்துக்காக மக்களை பலிகொடுத்து அவர்களது அரசியலை தக்கவைத்துக் கொள்ள பாடுபடும் யதார்த்தத்தை உணருங்கள்.
அந்தவகையில் முப்பது வருட கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தை உருவாக்கி இந்த நாட்டின் எப்பாகத்துக்கும் அச்சமின்றி எந்த நேரத்திலும் பயணம் செய்யும் உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தந்த பெரும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் கரங்களை பலப்படுத்த வேண்டும். நாளை நடைபெறும் தபால் மூல வாக்களிப்பில் சமூகத்தின் பாதுகாப்பை இருப்பை கருத்தில் கொண்டு தாமரை மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அரச ஊழியர்கள் அனைவரையும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.
மயோன் முஸ்தபா
முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர்
(ஊடகப் பிரிவு)
Comments
Post a comment