நாளை இரவிலிருந்து நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு
முழுவதும், (குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலை ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவிலிருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவிலிருந்து இலங்கைக்கு தென்கிழக்காக ஒரு வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கைக்கு தெற்காக காணப்படும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

-வளிமண்டலவியல் திணைக்களம்

கருத்துகள்

popular posts

ரிஷாதும் ஹக்கீமும் வட, கிழக்குக்கு வெளியே தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது

மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் 2014ல் அங்கிகரிக்கப்பட்ட கெசட்டை வைத்து கல்முனையை அபிவிருத்தி செய்வோம்.

இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இராணுவத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் - பிரதமர்