கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வெடிக்காத புதிய கைக்குண்டு மீட்பு

கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வெடிக்காத புதிய கைக்குண்டு மீட்கப்பட்ட நிலையில் பெரும்
அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை கிட்டங்கி சேனைக்குடியிருப்பு பாண்டிருப்பு வீதியை இணைக்கும் சந்திக்கு அருகாமையில் திங்கட்கிழமை(28) காலை குறித்த புதிய கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

வீதியோரத்தில் பயணம் செய்த நபர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இப்புதிய கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு இயக்கப்பட்டுள்ளதுடன் வெடிக்கும் நிலையில் காணப்படுவதனால் பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள் பொலிஸாரினால் போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற கல்முனை பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டு இராணுவத்தினரும் வெடி குண்டு செயலிழக்கும் படையினரும் சம்பவ இடத்தில் செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்