Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்ட கறல் படிந்த கசப்பு வரலாற்றை என்றும் எம்மால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. -அதாவுல்லா

கடந்த நான்கரை வருடங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 
தலைமையை இழந்த இந்த நாட்டின் முஸ்லிம் மக்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்ட கறல் படிந்த கசப்பு வரலாற்றை என்றும் எம்மால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது.இவ்வாறு சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபகஷவை ஆதரித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார மேடையில் பெரும் திரளான சன சமுத்திரத்தின் மத்தியில் உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,

எமது நாட்டையும் , நம்மையும் காப்பாற்றி , வடக்கிலிருந்து கிழக்கை தனியாக பிரித்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றி, எமது நாட்டை ஒரு முதுகெலும்புள்ள இராஜ்சியமாக மாற்றி எமக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க வழியமைத்த பெரும் தலைவன் மஹிந்த ராஜபக்ஷவை  கிழக்கு மண்ணும் மக்களும் என்றும் மறந்து விடக்கூடாது.தமது உயிரை பணயம் வைத்து கடலில் மீன் பிடித்து தமது வாழ்க்கையை ஓட்டிச்செல்லும் மீனவர்கள் மட்டுமல்ல , பள்ளிகளிலே நிம்மதியாக தொழ முடியாத , கோயில்களில் புசாரிகள் தமது கடமைகளை சரியாக செய்ய முடியாத , பாடசாலைகளுக்கு எமது பிள்ளைகள் போக முடியாத , மீன் சந்தைக்கு போனால் குண்டு வெடிக்கும் என்ற நிலைமையை மாற்றி புலிப்பயங்கரவாதத்தை தோற்கடித்து எம்மை நிம்மதியாக வாழ வைத்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினை ஒரு கணம் நினைத்து பாருங்கள்.


வாழ்வதற்கு எவரேனும் சுவாசக்காற்றை கொடுக்க மாட்டானா  இந்த விடுதலையோடு எம் பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் உருவாக்கிய ஸ்தாபனத்தினூடாக முஸ்லீம்களுக்கு எதையாவது செய்யலாம் என்றிருந்த நாம் இன்று அந்த இயக்கத்துடன் இல்லை.


மஹிந்த ராஜபக்ஷ அவர்களை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக்கி கொடிய பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து தாருங்கள் , வடக்கிலிலிருந்து கிழக்கை பிரித்து தாருங்கள் , இலங்கையில் வாழும் எல்லா இனத்தவர்களுக்கிடையிலும் ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் பொதுவான திட்டமொன்றை வகுத்து தாருங்கள் என்ற மூன்று விடயங்களை அவரிடம் நாம் முன் வைத்தோம்.


முதல் இரண்டு விடயங்களையும் முடித்து மூன்றாவது விடயத்தை முடிப்பதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவுப் ஹக்கீமும் , இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாத் பதியுதீனும் ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்ததும் இனக்கலவரங்கள் வெடித்து முஸ்லீம்களை இந்த தலைவனிடமிருந்து  பிரித்து இந்த நாட்டை சின்னா பின்னமாக்குவதற்காக 2013 ஆம் ஆண்டு நாம் பாவிக்கப்பட்டோம்.

ஹக்கீம் மற்றும் றிஸாத் ஆகியோர் நாடகமாடி குறிப்பாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றி நம்மையெல்லாம் நாட்டுப்பற்று அற்றவர்களாக மாற்றி மஹிந்த ராஜபகஷவுக்கு நன்றிக்கடனற்றவர்களாக காட்டி எம்மையெல்லாம் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் எதிரிகளாக பார்க்கப்படுபவர்களாக காட்டினார்கள்.


எனவே தொடர்ந்தும் கிழக்கு மக்கள் தவறுகளை செய்யாமல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபகஷ இலட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதனை இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் ஏற்கனவே முடிவெடுத்து விட்ட இந்த நிலையில் நாம் அளிக்கும் வாக்குகள் அனைத்தும் போனஸ் வாக்குகளாகும். எனத் தெரிவித்தார்.

-அக்தார்

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச