கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு ஜனாதிபதி வெள்ளி விருது!


கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு (AMH) இந்த ஆண்டிற்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் பசுமை விருது வழங்கும் நிகழ்வில் (Presidential Environmental Awards - 2019) வெள்ளி விருது கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்விருதின் மூலம் இப்பிராந்தியத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நெலும் பொக்குன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த வெள்ளி விருதினை கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றகுமானிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

இதற்காக அயராது முன்னின்று உழைத்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான் உள்ளிட்ட ஏனேய வைத்தியர்கள், வைத்தியசாலை நிருவாகத்தினர், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

-ஜௌசான்

Comments

popular posts

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா