போலி தகவல்களை பரப்பும் கீழ்த்தரமான, அரசியல் பரப்புரையை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் - எஸ்.எம்.மரிக்கார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாத கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருபோதும் ஏற்கமாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -22- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படு பயங்கரமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அப்படியான யோசனைகள் முன்வைக்கப்படவில்லை என்பதை கூறிக்கொள்வதுடன், போலி தகவல்களை பரப்பும் கீழ்த்தரமான அரசியல் பரப்புரையை கைவிடுமாறு மஹிந்த தரப்பிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோல் கடந்த நான்கரை வருடங்களில் சமஷ்டி அல்ல, ஒரு பிரதேச செலயகத்தைகூட நாம் வழங்கவில்லை. எனவே, பிரிவினைவாத கோரிக்கைகளை எமது ஜனாதிபதி வேட்பாளர் ஒருபோதும் ஏற்கமாட்டார்.

ஒற்றையாட்சியை ஒருபோதும் கைவிடமாட்டோம். பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் பாதுகாக்கப்படும். இது கூட்டமைப்புக்கும் நன்கு தெரியும் என்றும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

-JM

Comments

popular posts

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்