ஹிஸ்புல்லாவுக்கு தொடரும் தடை! நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவு

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் தீர்மானத்திற்கு தொடர்ந்தும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியனால் அண்மையில் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்த மன்சூரை நீக்கி நிசாம் என்பவரை கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்வதற்கு ஹிஸ்புல்லா மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை குறித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்