குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியோ பிரதமரோ எவராக இருந்தாலும் தண்டனை - அஜித் மான்மப்பெரும

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியோ பிரதமரோ எவராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கூறினார்.

தெரிவுக்குழுவினால் நீதிமன்றமாக செயற்பட முடியாது என்று கூறிய அவர், இந்த அறிக்கை நீதிமன்றத்திற்குச் செல்லும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவர், எமது அரசாங்கம் தான் இதற்காக குழு அமைத்தது. அரசுக்கு எதிராக விரல் நீட்ட இடமளிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆட்சியில் அரசுக்கு எதிராக விரல் நீட்டியவர்கள் கொல்லப்பட்டார்கள். 

ஆனால், அரசாங்கம் ஜனநாயக ரீதியான முடிவு எடுத்து தெரிவுக்குழு நியமித்தது. இதன் அறிக்கை நீதிமன்றத்திற்குச் சென்று ஜனாதிபதியோ பிரதமரோ வேறு எவரோ குற்றவாளியானால் கட்டாயம் தண்டிக்கப்படுவர். அவர்கள் பதவி விலக நேரும்.

கடந்த காலத்தில் ஜனாதிபதி எடுத்த முடிவு தவறு என நீதிமன்றம் சுதந்திரமாகத் தீர்ப்பு வழங்கியது. தெரிவுக்குழு நடுநிலையாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதன் அறிக்கை சட்டபூர்வமானது. எனவே, சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க நாம் தயாராக இருக்கிறோம் என்றார். 

 பிஹாம் (newsview)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்