ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
தேர்தல் பிரசாரத்தின் போது ஸக்ரான் ஹிஸ்புல்லாவை சந்தித்து பேசிய போட்டோவை பரப்பி ஸஹ்ரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தொடர்பு உள்ளது என்று இட்டுக்கட்டியவர்கள் ஹக்கீமின் கூட்டமே.
ஒருவன் பயங்கரவாதியாக அடையாளப்படுத்துமுன் தேர்தலில் அவனது வாக்கும் தேவை என்பதால் சந்திப்பது என்பது யதார்த்தமான ஒன்று என்பதால் ஹிஸ்புல்லாவுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு இருக்க முடியாது என உலமா கட்சி அரசுக்கு பகிரங்கமாக சொன்னது.
இப்போது ஹக்கீம் ஸ்ஹ்ரானுடன் கலந்து கொள்ளும் விடியோ வந்துள்ளதால் ஹக்கீம் ஆதரவு கூட்டம் சுடுகுது மடியப்பிடி என்பது போல் குதிக்கிறார்கள்.
மிப்லால் மௌலவி சொல்வது போல் ஹிஸ்புல்லா விசாரிக்கப்பட்டது போல் ஹக்கீமும் இது பற்றி விசாரிக்கப்பட வேண்டியவர்தான்.
ஹக்கீம் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவரா என்பது எமக்கு தெரியாது. ஆனால் ஒரே விடயத்துக்காக ஹிஸ்புல்லா விசாரிக்கப்பட முடியும் என்றால் அதே விடயத்துக்காக ஹக்கீம் விசாரிக்கப்பட வில்லை என்றால் இதன் பின்னால் இருப்பது ஹிஸ்புல்லாவை பழிவாங்க துடிக்கும் ஐ தேகவும் ஹக்கீம் கோஷ்டியும்தான் என்ற சந்தேகம் உள்ளது உண்மை.
Mubarak Abdul Majeed

Comments
Post a comment