Skip to main content

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

கல்முனை_மாநகர_சபை #வரவு_செலவுத்திட்டம்_வெற்றி #பெற்றதன்_பின்னணியில்

#கல்முனை_மாநகர_சபை
#வரவு_செலவுத்திட்டம்_வெற்றி #பெற்றதன்_பின்னணியில்
#இருக்கும்_மர்மம்_என்ன?
********************************

கல்முனை மாநகர சபையை பொருத்தமட்டில் ஆளும் கட்சி  உறுப்பினர்களை விட எதிர்க் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அந்த அடிப்படையில் கடந்த வருட வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது

ஆனால் இன்று வரவுசெலவுத்திட்டம் அனைவரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றியடைந்தது இதன் பின்னணியில் நடந்த உண்மை என்னவென்று பட்சிடம் கேட்டபோது!

பட்சி அறிந்துகொண்ட ரகசியம் என்னவென்றால்.......

 அஜந்தா டீலர்களுக்கும் முதல்வருக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தையின் நிமிர்த்தம் இந்த வரவு செலவுத் திட்டத்தை நாங்கள் எதிர்க்க மாட்டோம் என்று வாக்குறுதியை டீலர்கள் முதல்வருக்கு வழங்கியிருந்தனர்

ஆனால் அஜந்தா டீலர்கள் சொன்ன விடயம் நாங்கள் எதிர்த்து வாக்களிக்காமல் விட்டால் அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாவிட்டால் எங்கள் ஊரில் மக்கள் எங்களை எதிர்ப்பார்கள் உங்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்துவார்கள் என்ன செய்ய முடியும் மாற்று வழி என்ன என்று ஆராய்ந்தபோது

முதல்வர் ஒரு சிறந்த சட்டத்தரணியாக இருப்பதால்  அஜந்தா டீலர்களுக்கும் மேயருக்கும்  இடையில் காணப்பட்ட #உடன்பாடு_என்னவென்றால்_நீங்கள் #இன்று_அரை_மணி_நேரம்_பிந்தி #சமூகம்_அளித்தால்_போதும் நான் அனைத்தையும் நிறைவேற்றி விடுவேன் என்ற உடன் பாட்டு ரகசியம்

#இதற்காக_பல_சன்மானங்கள் அஜந்தா டீலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

கல்முனை முதல்வர் இந்த வரவு செலவுத் திட்டத்தை எவ்வாறு வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார் அதன் ஒரு அங்கமாக பெண் உறுப்பினர்கள் இன்று வருகையை தவிர்த்தார்கள் அதேபோன்று டீலர்கள் அரைமணிநேரம் காலதாமதம் எடுத்தார்கள்

அஜந்தா டீலர்கள்  வாக்கெடுப்பில் #நடுநிலை_பேணுவது_தொடர்பாக #சிந்திக்கிறார்கள் என்று நான் ஏற்கனவே #ஓரிரு_நாட்களுக்கு
#முதல்_பதிவு_செய்தேன்_ஆனால் #யாரும்_நம்பவில்லை இன்று இந்த அஜந்தா டீலர்களை உண்மையான முகத்திரைகள் மக்கள் இனம் கண்டுள்ளார்கள்

அனைத்தும் திட்டமிடப்பட்ட சதியே மருதூர் மக்களே சிந்தியுங்கள் இன்னும் இன்னும் இந்த அஜந்தா டீலர்களை நம்ப போகிறீர்களா? இவர்களுக்கு சபையை பெற்றுத் தருவார்களா? ஒரு வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தெரியாதவர்கள்.

இவர்களின் அரசியல் சுயநலத்துக்காக ஆடுகின்ற நாடகம் தான் அனைத்தும்

அனைத்து உண்மைகளையும் மறைத்து  மக்களை மடையர்கள் ஆக்குவதற்கு கூட்டத்தை கூட்டி நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறோம் கிழக்கு மாகாணசபையில் முறைப்பாடு செய்யப் போகிறோம் என்று கதை சொல்வார்கள் மக்களே இன்னுமின்னும் இவர்களின் கதையை கேட்டு மடையர்கள் ஆகிவிட வேண்டாம்

மீண்டும் சொல்லுகிறேன்
இன்ஷா அல்லாஹ் இந்த அஜந்தா டீலர்களில் முகத்திரைகள் இன்னும் கிழிக்கப்பட்டு இவர்கள் மக்களால் துரத்தியடிக்க படுகின்ற காலம் மிகத் தொலைவில் இல்லை என்பது மட்டும் யதார்த்தம்.

மருதூர் மக்கள் மடையர்கள் இல்லை உங்களுடைய ஏமாற்று வித்தை வார்த்தைகளை இன்னும் கேட்டு கொண்டிருப்பதற்கு

சத்தியம் வென்றே தீரும்
அசத்தியம் அழிந்தே ஆகும்

Zacky Zain

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச