Skip to main content

மானம் மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். - ரிசாத் பதியுதீன்

இந்நாட்டில் ஒற்றுமை, நிம்மதி, பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகம் யாரை வெல்ல வைக்க வேண்டும் எனவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு வாக்குக் கூட சிறடிக்கப்படாமல் ஒட்டு மொத்தமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரது வெற்றியை  உறுதி செய்ய வேண்டும் என்று வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் தல்கஸ்பிட்டியவில் ரூபா 20 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் மருத்துவ நிலையம் திறப்பு விழாவில்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்த பேசுகையில்

இன ஒற்றுமை பேசப்படுகிறது. நாங்கள் பிரிந்து வாழ முடியாது. நாங்கள் எல்லோரும் இந்நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். இப்படி இந்த நாட்டிலே ஒன்று சேர்ந்து இனவாதம் இல்லாமல் மதவாதம் இல்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக வாழுகின்ற ஒரு நல்ல தலைமைத்துவத்தை இந்நாட்டுக் கொண்டு வர வேண்டும் என்று ஒன்று பட்டு இருக்கின்றார்கள்;. இந்தப் போரட்டத்தில் யாரை வெல்லச் செய்வதன் மூலமாக எங்கள் நிம்மதி பாதுகாக்கப்படும். 

மானம் மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக எல்லாம் நாங்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்
இந்நாட்டில் மலையகம் , தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடித்து கொள்ளையிடுவதற்காக இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக எல்லா இடங்களிலும் முகவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த முகவர்கள் எப்போதும் சமுதாயத்திற்காகப் பேசியவர்கள் அல்லர். இந்த சமுதாயம் அடக்கி

ஒடுக்கி பாதிப்புக்குள்ளாகிய போதெல்லாம் இந்த முகவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியாது. இவர்கள் நாடு முழுவதும் அலைந்து திரிகின்றார்கள் சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்காகவே.
சிறுபான்மை சமூகத்திற்குள்ளேயே இவ்வாறான சதியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். பெரும்பான்மையின மக்களிடத்தில் சென்று நாங்கள் இந்த அணியிலே உள்ளோம் என்று கூறி கொத்துக் கொத்தாக வாக்களிக்க வேண்டும் என்று இனவாத பிரச்சாரத்தைச் செய்கின்றனர்.  

உதய கம்பன்பிலவின் பிரதித் தலைவருடைய பிரச்சாரம் வெளியே வந்தது. நாட்கள் கொஞ்சம் நாள். நீங்கள் பொறுமையாக இருங்கள். இந்த தேர்தலில் கோத்தா வென்ற பிறகு முஸ்லிம்களுடைய வியாபாரத்தை அடக்குவோம், முஸ்லிம்களுடைய மத நடவடிக்கைகளை ஒடுக்குவோம். அவர்களுடைய குரல்வலைகைள நசுக்குவோம். அவர்களை அடிமைகள் போல நடத்துவோம் என்று பேசிய பேச்சு வெளியே வந்தன. இதுதான் அவர்களுடன் உள்ளத்திலுள்ள விசயங்கள். அவர்களுடன் இருக்கின்ற தேரர்களை நீங்கள் பார்க்கலாம்.

வைத்தியர் சாபிக்காக நியாமற்ற குற்றத்தைச் சுமத்தி  அதுரெலிய ரதன தேரர். விமல் வீரவன்ச போன்றவர்கள் எதிராகச் செயற்பட்டார்கள். இவர்கள் எல்லோரும் அவர்களுடன் இருப்பவர்கள்.
எனவே எமது ஒரு வாக்குக் கூட சிதறடிக்கப்படக் கூடாது. பச்சை, நீலம், சிவப்பு என்;று பல வர்ணங்களில் பிரிந்து வாழ்ந்த சமூகம் ஒட்டுமொத்தமாக எம்முடைய பாதுகாப்புக்காகவும் நிம்மதிக்காகவும் சஜித் பிரேமதாச நாங்கள் வாக்களிக்க வேண்டும்.

உயிர்த்;த ஞாயிறு தினத்துக்குப் பின்னர் மினுவான்கொடை தொடக்கம்  குருநாகல், புத்தளம், கம்பஹா உள்ளிட்ட பிதேசங்களில் வன்முறைகளில் ஈடுபட்டார்கள். இதை யார் செய்தார்கள் என்பதை கைது செய்யப்பட்ட போது அவதானித்தோம். ஏன் செய்தார்கள். இப்படியான வன்முறைகளைச் செய்து நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன் செய்தார்கள். எப்படியாவது ஆட்சி பீடம் ஏற வேண்டும். அதற்காக எந்த அநியாயத்தையும் செய்யும் சதிக்காரக் கூட்டம் தான் அவர்கள். அந்த அணிக்கு எம்மவர்களும் முகவர்களாக செயற்படுகின்றார்கள். வெட்கமாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி
28-10-2019

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு பேசும் போது,

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of theLondon based Global Peace Institute (GPI)which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI Founder President Nawaz Rajabdeen’s contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” said COSMI Founder Pres…

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே
பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் !

சஜீத் − ரணில் பிரச்சினை
கூட்டனிக்கு பாதிப்பில்லை !!

நான் நிரபராதி என்பதை
சிங்கள மக்கள் உணர்வர் !!!

ஆட்சியில் இணையுமாறு அழைப்பு
வந்தால் தீர்மானிக்கலாம் !!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;

கேள்வி:
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…