ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
கல்வி, கலாசாரம், போஷாக்கு, அபிவிருத்தி என்பவற்றில் வலுப்பெற்ற தமிழ் சமூகத்தை சர்வதேச ரீதியில் உருவாக்க வேண்டும் என தாயக ஜனநாயக கட்சியின் பதில் தலைவர் நிர்மலன் குறிப்பிட்டார்.
இன்று கொழும்பு நடாவில் நடைபெற்ற மேற்படி கட்சியின் ஊடக மாநாட்டில் குறிப்பிட்டதாவது,
வடக்கு கிழக்கை மையப்படுத்திய எமது கட்சிக்கு 7 சர்வதேச நாடுகளில் தொடர்புகள் இருக்கின்றன எனவும் எம்முடன் வடக்கு கிழக்கின் கல்வியலாளர்கள் இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் மூலம் எமது கட்சியை பலப்படுத்தி தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
100 வீதம் தமிழர்களைக்கொண்ட எமது கட்சி எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.
-அல்ஜஸீறாலங்கா செய்தியாளர் முர்ஷித்
Comments
Post a comment