உயிர்த்த ஞாயிரு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்தமுறையில் எதிர்வினையாற்றவில்லை


அரசாங்கமானது உயிர்த்த ஞாயிரு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறந்தமுறையில் எதிர்வினையாற்றவில்லை.
(அல்ஜ‌ஸீறால‌ங்கா செய்தியாள‌ர் முர்ஷித் முபாற‌க்)

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிரு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கமானது எந்தவித தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என பிசொப் எமெரிட்டஸ் ஜி.எஸ்.கே. பிரான்ஸிஸ் இன்று செவ்வாய்க்கிழமை(25.10.2019) நடா (NADA) கேற்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

 நடைபெற்ற துயரகரமான சம்பவத்திற்கும் 99% சதவீதமான முஸ்லிம்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இருந்திருக்கவில்லை என்றும் அநியாயமான முறையில் சாதாரண பொதுமக்களும் அதன்பிற்பாடான தாக்குதலில் உள்வாங்கப்பட்டிருந்தனர் என தனது வருத்தத்தைத்தெறிவித்தார்.

இந்த‌த்தாக்குத‌லின் பின் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை விட‌ சாதார‌ண‌ முஸ்லிம்க‌ளே பாதிக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

 அதுமட்டுமல்லாமல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியான தீர்வு இன்ன‌மும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை என்றும் குறிப்பிட்ட‌ அவ‌ர் உட‌ன‌டியாக‌ தீர்வு  வழங்காத‌  பட்சத்தில் நீதிமன்றத்தை நாடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்