வசீம் தாஜுதீனின் கொலை வழக்கு எதிர்வரும் 7ம் திகதி விசாரணைக்கு

ரகர் வீரர் வசீம் தாஜுதீனின் கொலை விசாரணையின் சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 
பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 7ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் பிரதிவாதியான அநுர சேனாநாயக்க சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என அவர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தாஜுதீன் கொலை விசாரணையின் போது சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-எம்.என்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்