மக்கள் ஆட்சியை மாற்றியதாக நினைத்தாலும் கடந்த அரசாங்கத்தில் இருந்த 53 அமைச்சர்கள், பிரதிஅமைச்சர்கள் இந்த அரசாங்கத்திலும் உள்ளனர் - அனுர குமார

நாட்டில் விவசாயத்துறையில் மாற்றத்தைக்கொண்டுவருவதும் உணவு பாதுகாப்பை உறுதிசெய்வதே எனது பிரதானநோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக தெரிவித்தார்.

நேற்று இரவு இரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்படி தகவலைதெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது விவசாய பொருட்களின் விலையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்ற இறக்கங்கள்உண்டுஇது போன்ற ஏற்ற இறக்கம் வேறு எந்தநாட்டிலும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்

மேலும் கடந்த அரசாங்கத்தில் இருந்த அதே அமைச்சர்கள்பிரதி அமைச்சர்கள்நாடாளுமன்ற உறுப்பினர்கள் 53 பேர் இந்த அரசாங்கத்திலும் உள்ளனர் எனவும் மக்கள் ஆட்சியை மாற்றியதாக நினைத்துக்கொடிருந்தாலும் மீண்டும்பழையவர்களையே நியமித்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்