கெரவலப்பிட்டிய மின்சார நிலையத்தில் கோளாறு ; வெளியிலிருந்து பெறப்படட மின்சாரத்துக்காக 52,230 மில்லியன் ரூபா செலவு( மினுவாங்கொடை நிருபர் )

   சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டிய 300 மெகாவோட் மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தி தாமதமாகியது தொடர்பாக,  "கோப்" குழு  விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 
   இம் மின் நிலையத்திலிருந்து மின்சார உற்பத்தி தாமதமடைந்ததால் வேறு இடங்களிலிருந்து அவசரமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிட வேண்டியிருந்தது. 
   2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை அவ்வாறு வெளி இடங்களில் இருந்து பெறப்பட்ட  மின்சாரத்துக்காக அரசாங்கம் 52,230 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக "கோப்" குழு முன்னிலையில் நேற்று முன்தினம் சாட்சியமளித்த இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். 
   2016 இல் 8560 மில்லியன் ரூபா, 2017 இல் 19,400 மில்லியன் ரூபா, 2018 இல் 11,580 மில்லியன் ரூபா மற்றும் இவ்வருடம் (2019) ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப் பகுதியில் 12,670 மில்லியன் ரூபாவை வெளியிடங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ததற்காக அரசாங்கம் செலவிட்டிருப்பதாக அந்த அதிகாரிகள்  சுட்டிக்காட்டியுள்ளனர்.
   சம்பூர் மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து எதிர்பார்த்த மின்சாரம் கிடைக்காததாலும், கெரவலப்பிட்டிய மின்சார நிலைய நிர்மாண வேலைகள் தாமதமடைந்ததாலுமே, வெளியிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக, இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
   இதேவேளை, 3000 மில்லியன் ரூபா செலவில் 50 டீசல் மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் 39,000 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்ததாகவும் ஆனால், இந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை இந்த ஜெனரேட்டர்கள் பழுதடைந்ததன் காரணமாக 73,398 மணித்தியாலங்கள் செயற்படாமல் இருந்ததாகவும், மின்சார சபை அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்