பேஸ்புக் பதிவு, அடிதடியில் முடிந்தது - 3 பேர் காயம்

வெல்லவாய பிரதேச சபையை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கித்துல்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான தந்தை மற்றும் 13 வயதான மகன் ஒருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்ட செய்தி தொடர்பில் இடம்பெற்ற கருத்து வேறுப்பாடு நீண்ட தூரம் சென்றமையினால் அது வன்முறையாக மாறியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மூவரும் நேற்று முன்தினம் இரவு தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஆபத்தான நிலைக்குள்ளான தந்தையும் மகனும், ஹம்பாந்தேட்டை வைத்தியசாலைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டனர்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரை கைது செய்வதற்காக தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments

popular posts

எட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு!

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது

மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.