"ஹரிஸ் எம்.பியின் முயற்சியால் கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்திற்கு 3 மாடி வகுப்பறை கட்டடம்"
"ஹரிஸ் எம்.பியின் முயற்சியால் கல்முனை அல்-அஸ்கர் வித்தியாலயத்திற்கு 3 மாடி வகுப்பறை கட்டடம்"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அரசாங்கத்தின் RIDP வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கல்முனை அல் அஸ்கர் வித்தியாலயத்திற்கு 12515280/- ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 3 மாடி வகுப்பறை கட்டடம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியவள அறிக்கை பிரதேச செயலகத்தின் ஊடாகவும் மற்றும் மதிப்பீடு அறிக்கை வலயகல்வி அலுவலகம் ஊடாகவும் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.என்பதோடு அடுத்த மாதம் அளவில் இதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட இருக்கின்றது

முன்னேற்றகரமான அடைவுகளை வெற்றிகரமாக அடைந்து கொண்டு இருக்கும் கல்முனை அல் அஸ்கர் வித்தியாலயத்திற்கு இக்காலகட்டத்தில் இந்த மூன்று மாடி கட்டட தேவைப்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகும் எனவும் இக் கட்டடத்திற்கு முழு முயற்சி செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும்,பாராட்டுகளையும் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் எம்.எச் அலி அக்பர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்