வேன் - ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து. ஸருஹுன் நிஸா என்பவர் உயிரிழப்பு . 11 பேர் காயம்.

மிஹிந்தல-அம்பகஹவெல சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில்
பெண்ணொருவர் பலியானதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நபர்கள் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


அனுராதபுரத்திலிருந்து பயணித்த ஜீப் வண்டி ஒன்றும் திருகோணமலையிலிருந்து பயணித்த வேன்  ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாக மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

வேனில்  பயணித்த ஸருஹுன் நிஸா என்ற  45 வயதுடைய பெண் ( மூதூர் தவிசாளர் ரபீக் அவர்களின் மனைவி ) ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் தம்பி படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
பட உதவி : suhaitha mashoor
-madawalanewsComments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்