Posts

Showing posts from October, 2019

ஸ்ரீல‌ங்கா சுத‌ந்திர‌ பொதுஜ‌ன‌ கூட்ட‌மைப்பு எனும் பெய‌ரில் கூட்டு ஒப்பந்தம்

Image
பொதுஜ‌ன‌ பெர‌முன‌ இன்று மேலும் 17 க‌ட்சிக‌ளுட‌ன் கூட்ட‌மைப்பாக‌ செய‌ற்ப‌டுவ‌த‌ற்கான‌ க‌ட்சிக‌ளுட‌னான‌ ஒப்ப‌ந்த‌ம் இல‌ங்கை ம‌ன்றக்க‌ல்லூரியில் ந‌டை பெற்ற‌து. ஸ்ரீல‌ங்கா சுத‌ந்திர‌ பொதுஜ‌ன‌ கூட்ட‌மைப்பு எனும் பெய‌ரில் இவ்வொப்ப‌ந்த‌ம் ந‌டை பெற்ற‌து. ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின‌ர் இவ்வாறான‌ கூட்ட‌ணி உருவாக்க‌ப்போவ‌தாக‌ சொல்லியும் எந்த‌வித‌ கூட்ட‌ணியோ கூட்டு ஒப்ப‌ந்த‌மோ செய்யாத‌ நிலையில் பொதுஜ‌ன‌ பெர‌முன‌ கூட்டு ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ள‌மை வ‌ர‌லாற்று நிக‌ழ்வாகும்.

இந்த நாட்டில் உறுதியான தலைமைத்துவம் உருவாக உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் ராமன்ஞ நிகாய மஹாநாயக தேரர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விடம் தெரிவிப்பு.

Image
இந்த நாட்டில் உறுதியான தலைமைத்துவம் உருவாக உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்  ராமன்ஞ நிகாய மஹாநாயக தேரர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விடம் தெரிவிப்பு. ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (31.10.2019) காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது #ராமன்ஞ நிகாய மஹாநாயக நாபனே ப்ரேம ஶ்ரீ நாயக தேரர் அவர்களை நேரில் சந்தித்து தான் இந்த தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்று தெளிவூட்டியதுடன், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருக்கும் விவரங்கள் தொடர்பிலும் முழு விளக்கம் வழங்கினார். இலங்கையில் வாழும் சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுடன் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருக்கும் முஸ்லிம்கள் பற்றிய தேவையற்ற சந்தேகங்களை நீக்குவதற்க்காகவுமே தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மஹாநாயக தேரருக்கு கலாநிதி ஹிஸ்புல்லாஹ் எடுத்துக் கூறினார். ஹிஸ்புல்லாஹ்வின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட மஹாநாயக்க தேரர் அவர்கள் இனங்களுக்கிடையில் ஒற்றுமை மிக அவசியமானது. கடந்த காலத்தில் நாம் வாழ்ந்ததை போல் ஒற்றுமையாக வாழ வேண்டும். பிரிவினைகள் இருக்கக் கூடாது. குறிப்பாக எதிர்கால இளைஞர்களுக்கு இன ஒற்றுமையை கற்றுக்க

சஜித் வென்றால் சம்பிக்கவை பிரதமராக்க திட்டம்

Image
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் பிரதமராக அறிவிப்பதற்கு நேற்றிரவு விசேட ஆலோசனையொன்று நடாத்தப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்தே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (30) திடீரென ஊடகவியலாளர்களைக் கூட்டி தானே பிரதமர் என அறிவித்ததாகவும் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். அடுத்த பிரதமர் யார் என்பதை சஜித் பிரேமதாச இதுவரையில் எந்தவொரு இடத்திலும் அறிவிக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலையில் பிரதமர் யார் என தெரியாது அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் தலைவருக்கு முஸ்லிம்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும். எந்தவித கோரிக்கையும், வேண்டுகோள்களும், நிபந்தனைகளும் இன்றி முஸ்லிம் தலைமைகள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க எடுத்த முடிவு தவறானது. கடந்த  ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவுக்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரவை வழங்கினர். இந்த நாட்டு வரலாற்றில் முஸ்லிம்கள் அதிக பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த ஒர் அரசாங்கமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்க

தமக்குச் சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை கண்டி வைத்தியசாலைக்கு வக்பு செய்தனர் கண்டி 'முஸ்லீம் ஹோட்டல்' குடும்பத்தார்.

Image
கண்டி போதனா வைத்தியசாலை, இன்று முதல் இலங்கையின் இரண்டாவது  தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, மத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  இதன்போது விஷேட  நிகழ்வாக, ஒரு முஸ்லிம் குடும்பத்தினரால், தமக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கரும் 40  பர்சஸ் பரப்பளவு காணியை வைத்தியசாலை உபயோகத்துக்காக அரசாங்கத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.  இந்தக் காணி, கண்டி பிரதான நகரில் அமைந்துள்ள 'முஸ்லீம் ஹோட்டல்' உரிமையாளர்களுக்கு  சொந்தமானதாகும்.  அல்லாஹுத்தஆலா அவர்களது குடும்பத்தாருக்கு மேலான சொர்க்கத்தை நசிப் ஆக்குவானாக. மடவலை நியூஸ்  – அல் ஹாஜ் சித்திக்

சிறுபான்மையினர் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது தவறாகும்: கிண்ணியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Image
சிறுபான்மையினர் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது தவறாகும்: கிண்ணியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதான கட்சிகள் மீதான விரக்தியில் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது பற்றி சிறுபான்மை சமூகம் சிந்திக்க முடியாது. இதன்மூலம் வாக்குகள் வீணடிக்கப்படுவதுடன், எதிரணி வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) திருகோணமலை, கிண்ணியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது; ஏப்ரல் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பற்ற சூழல், அவதூறு குற்றச்சாட்டுகள், முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் என நாலாபுறங்களிலும் பலவிதமான நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியது. இத்தகைய இக்கட்டான சூழலுக்கு எமது சமூகத்தை ஆளாக்கிய தரப்பை வெ

டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

Image
நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம்  முதல் கடந்த (25) வெள்ளிக்கிழமை  வரையிலான  காலப்பகுதியினுள், டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.    அத்தோடு, இக்காலப்பகுதியினுள் டெங்கு நோயினால் 58,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பிரிவு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், கடந்த வருடத்தில் டெங்கு நோயினால் 58 பேரே உயிரிழந்திருந்தனர்.    இந்த வருடத்தில் 10 மாதங்களினுள் டெங்கு நோய் காரணமாக 80 உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளமை கவலைக்குரிய விடயம் எனவும், தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.    ஆகையினால், டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதோடு, வழக்கமான நடவடிக்கையாக அவற்றை அழிக்க வேண்டும்.    இவ்வாறான இடங்களைத் துப்புரவு செய்வதற்காக குறைந்தபட்சம் 30 நிமிடங்களையாவது ஒதுக்க வேண்டும் எனவும், பொதுமக்களிடம் தொற்று நோயியல் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.    இந்த வருடத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, மேல் மாகாணத்தில் 27,775 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்

அமெரிக்க நிறுவனமான MCC நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் 37 ஆவது நாடாக இலங்கை

Image
அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனம் இலங்கைக்கு வழங்கும் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். கொழும்பில் வாகன போக்குவரத்து முகாமைத்துவம், நாடளாவிய ரீதியில் வீதி நிர்மாணம் மற்றும் அபிவிருத்தி, முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையிலான காணி நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆகிய திட்டங்கள் இந்த நிதியின் மூலம் செயற்படுத்தப்படவுள்ளன. Millennium Challenge Corporation நிறுவனத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னரும் இலங்கையின் தேவைக்கேற்ப குறித்த திட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான இயலுமை இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து இவ்வாறு நிதியைப் பெற்றுக்கொள்ளும் 37 ஆவது நாடு இலங்கை என்பதுடன், 2020 ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கை அமுலுக்கு வரவுள்ளது.

வசந்தவின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டது !!

Image
இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அவரது அமைச்சுப் பதவி விரைவில் பறிக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வசந்த தீர்மானித்திருந்தமை குறிப்பிட்டார்

மானம் மரியாதை பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். - ரிசாத் பதியுதீன்

Image
இந்நாட்டில் ஒற்றுமை, நிம்மதி, பெண்களுடைய கண்ணியம் மதத்தலைவர்களுடைய பாதுகாப்பு சொத்துக்களுடைய பாதுகாப்பு பற்றி எல்லாம் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதேபோன்று முஸ்லிம் சமூகம் யாரை வெல்ல வைக்க வேண்டும் எனவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு வாக்குக் கூட சிறடிக்கப்படாமல் ஒட்டு மொத்தமாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரது வெற்றியை  உறுதி செய்ய வேண்டும் என்று வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் தல்கஸ்பிட்டியவில் ரூபா 20 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாய் சேய் மருத்துவ நிலையம் திறப்பு விழாவில்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்த பேசுகையில் இன ஒற்றுமை பேசப்படுகிறது. நாங்கள் பிரிந்து வாழ முடியாது. நாங்கள் எல்லோரும் இந்நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். இப்படி இந்த நாட்டிலே ஒன்று சேர்ந்து இனவாதம் இல்லாமல் மதவாதம் இல்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக வாழுகின்ற ஒரு நல்ல தலைமைத்துவத்தை இந்நாட்டுக் கொண்டு வர வேண்டும் என்று ஒன்று பட்டு இருக்கின்றார்கள்;. இந்தப் போரட்ட

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாதியின் மரணத்தை வரவேற்கிறது உலமா சபை

Image

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு ஜனாதிபதி வெள்ளி விருது!

Image
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு (AMH) இந்த ஆண்டிற்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் பசுமை விருது வழங்கும் நிகழ்வில் (Presidential Environmental Awards - 2019) வெள்ளி விருது கிடைக்கப் பெற்றுள்ளது. இவ்விருதின் மூலம் இப்பிராந்தியத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நெலும் பொக்குன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த வெள்ளி விருதினை கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றகுமானிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார். இதற்காக அயராது முன்னின்று உழைத்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான் உள்ளிட்ட ஏனேய வைத்தியர்கள், வைத்தியசாலை நிருவாகத்தினர், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் பலரும் தெரிவித்து வருகின்றனர். -ஜௌசான்

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்திற்கு UNP யினர் கண்டனம்

Image
கோத்தபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்காவிடின் முஸ்லிம் சமூகம் வன்முறைகளுக்கு இலக்காக நேரிடும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வெளியிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் சமூகவலைத்தளங்களில் முஸ்லிம்கள் மத்தியில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உரையாற்றும் காணொளி ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இக்காணொளியில் அலி சப்ரி கூறும் கருத்துக்கள் கடும் கண்டத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.  சமூக செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம் சமூகத்தினரை தவறாக வழிநடத்த வேண்டாம் என்றும், தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அவர்கள் சுயமாக மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் தமது டுவிட்டர் பக்கத்தில் சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு தமது பதில் கருத்துக்களையும், கண்டனங்களையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.  இது தொடர்பில் ஜனாதிபதி  சட்டத்தரணி அலி சப்ரி விளக்கம்

தபால் மூல வாக்காளர்களுக்கு மயோன் முஸ்தபா உருக்கமான வேண்டுகோள்!

Image
அச்சமற்ற சூழலை உருவாக்க அரச ஊழியர்கள் சிந்தித்து வாக்களியுங்கள்! மக்களை பலிகொடுத்து முஸ்லிம் கட்சிகள் செய்யும் தரகர் அரசியலில் இருந்து விடுபடுங்கள்! இலங்கை தாய் நாட்டில் அனைத்து இன மத மொழி பேதம் கடந்து திறந்த மனதுடன் ஒற்றுமைப்பட்டு சிறந்த எதிர்காலம் நிறைந்த தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு அழைக்கிறேன். அரச இயந்திரத்தை இயக்குகிற முதுகெலும்பாக திகழ்கிற நீங்கள் எடுக்கும் தீர்மானம் கடந்த ஆட்சியில் இந்த நாடு கண்டுகொண்ட அனர்த்த நிலையில் இருந்து விடுவிக்கும் வகையில் அமைதல் வேண்டும். குறிப்பாக வட கிழக்கு வாழ் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தென்னிலங்கை பூராவும் பரந்து வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும். மக்களை பலிகொடுத்து முஸ்லிம் கட்சிகள் செய்யும் தரகர் அரசியலில் இருந்து விடுபடுங்கள். ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவிட்டு முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை சூறையாடும் மிலேச்சத்தனமான தாக்குதலை விடியற்காலை வந்து சம்பவத்தை பார்த்துவிட்டு கண்டன அறிக்கையோடு காலம் கடத்தும் இழிநிலை அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பிடியில் இருந்து விடுப

அடைமழை... மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு.

Image
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் செங்கலடி  - பதுளை வீதியின் போக்குவரத்து இன்று (29) அதிகாலை முதல் தடைப்பட்டுள்ளது. செங்கலடி – பதுளை வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில் கோப்பாவெளியில் பாலம் நிர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட மாற்று வீதி வெள்ளத்தினால் பாதிக்க்பபட்டதன் காரணமாக போக்குவரத்துக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ந. வில்வரெடனம் தெரிவித்தார். இதன் காரணமாக செங்கலடி பதுளை வீதியினூடாக தூரப் பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மாற்றுவழியினைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தும்பானஞ்சோலை பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு நீர் வெலிக்காகண்டியை ஊடறுத்துச் செல்வதால் மாற்றுவழிப் பாதை சேதமடைந்துள்ளது. குறித்த பகுதியில் நீரோட்டாம் அதிகமாக உள்ளதனால் வீதியின் செப்பனிடும் பணிகள் தடைப்பட்டுள்ளன.

The All Ceylon Makkal Congress (ACMC) welcomed the European Union Election Observation

Image
The All Ceylon Makkal Congress (ACMC) welcomed the European Union Election Observation Mission to Sri Lanka’s Presidential Election (EU EOM) with open arms on 29 October. ACMC stressed EU EOM’s arrival strengthens the electoral efforts of all political parties, especially minority parties such as ACMC in the Presidential Elections of November 2019. “Your scrutiny strengthens Sri Lanka’s democratic election process. It also encourages minority parties such as our ACMC,” said Leader of ACMC, Vanni District MP Rishad Bathiudeen. ACMC Leader and Minister of Industry, Commerce, Resettlement of Protracted Displaced Persons, Cooperative Development, Skills Development & Vocational Training Bathiudeen, joined by ACMC officials, was addressing the Political Analyst of European Union Election Observation Mission (EU EOM) Sri Lanka 2019 Ms Mary Boland and her team in Colombo on 29 October. In comments to Ms Boland and her colleagues, MP Rishad Bathiudeen, said: “Minority parties such

சுர்ஜித் சுயநினைவை இழந்துவிட்டான்! மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி

Image
ஆள்துளை கிணற்றில் சிக்கி 3-வது நாளாக தவித்து வரும் சுர்ஜித் சுய நினைவை இழந்து இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் திருச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் முதன்மை மருத்துவர் கூறுகையில், “குழந்தை சுர்ஜித் உயிரோடு இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அதற்கான அறிகுறிகள் எங்களுக்கு தெளிவாக தெரிகின்றன. குழந்தையின் உடல் வெப்ப நிலையை வைத்து குழந்தை உயிரோடிருப்பதை எங்களால் உறுதி செய்ய இயன்றது. ஆனால் குழந்தை தன்னுடைய சுயநினைவை இழந்து விட்டது. 75 மணி நேரம் சுயநினைவை இழந்தால் கூட குழந்தையை மீட்பதற்கான அனைத்து வசதிகளும் இங்கு தயார் செய்யப்பட்டுள்ளன. குழந்தையை காப்பாற்றுவதற்கான அனைத்து வசதிகளும் நிரம்பிய 5 அம்புலன்ஸ்கள் இங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் குழந்தையை வெளியே எடுத்துவிட்டால், குழந்தையை மீட்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது அப்பகுதி மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நடத்திவரும் பேச்சுக்கள் தொடரும். - சுமந்திரன்

Image
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நடத்திவரும் பேச்சுக்கள் தொடரும். ஐந்து கட்சிகள் கூட்டு உருவாக்கப்படுவதற்கு முன்னரே கூட்டமைப்பு இந்தப் பேச்சுக்களை ஆரம்பித்துவிட்டது. அந்தப் பேச்சுக்கள் தொடர்ந்தும் இடம்பெறும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது “5 கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது ஆவணத்தைத் தயாரிப்பதற்கு முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுடன் பேச்சை ஆரம்பித்தது.  ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுடன் பேச்சு நடத்தியுள்ளோம். இந்தப் பேச்சுக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கும். 5 கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளுடனேயே பேச்சு நடத்தமாட்டோம் என்று பிரதான வேட்பாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், நாம் (கூட்டமைப்பு) அவர்களுடன் ஏற

அடுத்துவரும் தேர்தல்களிலும் போட்டியிட்டு இந்த பயணத்தை தொடர்ந்து முன்னுக்கு செல்வதே எமது இலக்காகும் - மகேஷ் சேனநாயக

Image
எமது கட்சி இந்த தேர்தலுடன் நின்றுவிடுவதில்லை. அடுத்துவரும் தேர்தல்களிலும் போட்டியிட்டு இந்த பயணத்தை தொடர்ந்து முன்னுக்கு செல்வதே எமது இலக்காகும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் நான் தேர்லில் போட்டியிடுவதில் இருந்து விலகி பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவளிக்கப்போவதாக  செய்திகள் பரவி வருகின்றன. அவ்வாறான எந்த எண்ணமும் எனக்கில்லை. நான் ஒருபோதும் போட்டியிடுவதில் இருந்து விலகப்போவதில்லை. அத்துடன் எமது கட்சி சிவில் பிரதிநிதிகளைக்கொண்ட கூட்டணியாகும். அரசியல்வாதிகள் யாரும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கமே, தற்போது இடம்பெற்றுவரும் மோசமான அரசியல் கலாசாரத்தை இல்லாமலாக்கி புதிய யுகத்தை ஏற்படுத்துவதாகும். மோசமான அரசியல் கலாசாரம் காரணமாகவே நாடு சுதந்திரமடைந்தது முதல் எந்த அபிவிருத்தியும் இல்லாமல் இருக்கின்றது. மேலும் இந்த தேர்தலுடன் நாங்கள் நின்றுவிடுவதில்லை. அடுத்துவரும் பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களிலும் போட்டியிட இருக்கின்றோம். இதுவே எமது ஆரம்பம்.

வேன் - ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து. ஸருஹுன் நிஸா என்பவர் உயிரிழப்பு . 11 பேர் காயம்.

Image
மிஹிந்தல-அம்பகஹவெல சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியானதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நபர்கள் அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அனுராதபுரத்திலிருந்து பயணித்த ஜீப் வண்டி ஒன்றும் திருகோணமலையிலிருந்து பயணித்த வேன்  ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதன் காரணமாக மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஊடக பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. வேனில்  பயணித்த ஸருஹுன் நிஸா என்ற  45 வயதுடைய பெண் ( மூதூர் தவிசாளர் ரபீக் அவர்களின் மனைவி ) ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் தம்பி படுகாயம் அடைந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். பட உதவி : suhaitha mashoor -madawalanews

தமிழ் பெண்ணை பார்த்து குங்குமப்பொட்டை அழித்துக்கொள் என்றோ, முஸ்லிம் பெண்ணை பார்த்து பர்தாவை அணியாதே என கூற எவருக்கும் அதிகாரம் இல்லை - அனுர குமார

Image
தமிழ் பெண்ணை பார்த்து குங்குமப்பொட்டை அழித்துக்கொள் என்றோ, முஸ்லிம் பெண்ணை  பார்த்து பர்தாவை அணியாதே என கூற எவருக்கும் அதிகாரம் இல்லை எனத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். அத்துடன் கடந்த காலங்களில் இந்த நாடு பாரிய மோதல்களுக்கு முகங்கொடுத்துவிட்டது . இனியும் அவ்வாறான நிலையை உருவாக்காது நாடாக நாம் முன்னோக்கி செல்ல முயற்சிக்க வேண்டும். இதில் சகல மக்களும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். இன்று எமது நாட்டுக்கு புதிய அபிவிருத்தி இலக்கொன்றை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். திகாரி நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இன்று நாடு பாரிய கடன் நெருக்கடியில் உள்ளது. சமூகமாக பாரிய குற்றங்கள் ஈடுபடும் நாடு, இன மத முரண்பாடுகள் நிகழும் நாடு. அடிப்படை தேவைகள் எவையும் மக்களுக்கு வழங்க முடியாத ஆட்சியே கொண்டுசெல்லப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இருந்து நாட்டினையும் மக்களையும் மீட்க வேண்டும். கடன்களில் இருந்து நாம் எவ்வாறு மீள்வது என்பதை சிந்திக்க வேண்டும். இது குறித்து ஆழமாக கலந்துரையாட

ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டை ஜனாதிபதி செயலகம் மறுப்பு

Image
ஜனாதிபதியின் தனிப்பட்ட பாவனைக்கு 800 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதும் எவ்வித அடிப்படையற்றதாகுமென்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.  பாராளுமன்றத்தின் இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஜனாதிபதிக்காக மேலும் 240 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.  இச்செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் தெளிவாக விளக்கமளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பதவி வகித்த அல்லது பதவி வகிக்கும் எந்தவொரு ஜனாதிபதிக்கும் தனிப்பட்ட பாவனைக்காக நிதி ஒதுக்கப்படுவதில்லை. அந்த நிதி தமது அலுவலகத்திற்கே ஒதுக்கப்படுகிறதுது.  தற்போதைய ஜனாதிபதியின் செலவுத் தலைப்பில் பெருமளவான நிதி, ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி விசேட செயலணிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சித் திட்டங்களுக்கேயாகும்.  ஜனாதிபதியின் தனிப்பட்ட பாவனைக்கு எந்த வகையிலும் நிதி ஒதுக்கப்படவில்லை. இத்தகைய விசமத்தனம