அரபு மத்ரசாக்களுக்கான மாணவர்களை 16 வயதில் இணைத்துக்கொள்ள வேண்டும், JVP

அநுரகுமார திசாநாயக்க – ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர்

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

அரபு மத்ரசாக்களுக்கான மாணவர்களை 16 வயதில் இணைத்துக்கொள்ள வேண்டும், குறைந்த வயது திருமணம் மற்றும் LGBT தொடர்பாக ஜேவிபி முன்வைத்துள்ள சில கருத்துக்கள் இன்று சமூக வலைத் தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன.  தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கும் முஸ்லிம்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இது தொடர்பாக நீங் கள் அவர்களுக்கு வழங்கும் பதில் என்ன?

நாட்டில் ஒரு பொதுவான சட்டமுள்ளது. அது போன்று அந்தந்த நாடுகளின் கலாசாரங்களுக்கு அமைவான பண்பாடுகளும் பழக்க வழக்கங்களும் சட்டங்களும் உள்ளன. எனினும் எமது நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் எமக்கு மத்தியில் வேறுபாடுகள், வித்தியாசங்களை ஏற்படுத்துவதன் மூலமல்ல. ஒன்றுபட்டு எல்லோரையும் அரவணைத்துச் செல்வதன் மூலமாகும்.

எல்லா சமயங்களுக்கும் அந்தந்த சமயங்களைப் பின்பற்றுபவர்களுக்கு அந்தச் சமயத்தை பற்றி சரியான முறையில் போதிக்கின்ற உரிமையுள்ளது. இம்மதங்கள் குறித்து சரியான விளக்கங்களை அம்மக்களுக்கு வழக்க முடியாமல் போயிருப்பதன் மூலம் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருக்கிறது. நாடெனும் வகையில் ஒன்றாக நாம் முன்னோக்கிச் செல்கையில் எமக்கு மத்தியில் பொதுவான சட்டம் காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும் பாலானவர்கள் உள்ளனர் என்பதையும் நாம் மறுக்கக்கூடாது.

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය