Skip to main content

சுவிஸில் மிகச்சிறப்பாக நடைபெற்ற, "புளொட்" அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வுதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) ஆகியவற்றின் ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக, இன்றையதினம் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை, 4552 Derendingen. எனுமிடத்தில், "சுவிஸ் வீரமக்கள் தின" நிகழ்வு எளிமையான முறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

"சுவிஸ் வீரமக்கள் தின" நிகழ்வு சுவிஸ்ரஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில், பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுடன், மலரஞ்சலி, மௌனஅஞ்சலி போன்ற நிகழ்வுடன், வரவேற்பு உரையும்,சகோதர கட்சிகளின் பேச்சாளர்கள் மற்றும் சான்றோர் உரை, நன்றியுரை போன்றனவும் மிகநேர்த்தியாக நடைபெற்று, மதிய போசனத்துடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தலைமையுரையாற்றிய, சுவிஸ்ரஞ்சன் அவர்கள் "புளொட் அமைப்பானது, வருடாவருடம் சுவிஸில் மிகப் பிரமாண்டமான முறையில் "வீரமக்கள் தினத்தை"  நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆயினும் இம்முறை வவுனியாவில் ஜூலை மாதம் நடைபெற்ற கழக மகாநாட்டை கருத்தில் கொண்டு, செப்டெம்பர் மாதமளவில் "வீரமக்கள் தினத்தை" நடத்துவதென தீர்மானித்து இருந்தோம். ஆயினும் வீரமக்கள் தினமானது, குறிப்பிட்ட ஒருமாத காலத்துக்குள் நடத்தப்பட வேண்டுமென, கழக தலைமையின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்படி நிகழ்வை உடன் நடாத்தி உள்ளோம்".

"தற்போது விடுமுறை காலம் என்பதினால் பல தோழர்கள் சுவிஸில் இல்லாத சூழ்நிலையிலும், குறுகியகால எமது அழைப்பை ஏற்றும், நாம் எதிர்பார்க்காத வகையில் மண்டபம் நிறைந்த மக்கள் வந்து உள்ளது எமக்கு மனமகிழ்வை தருகிறது, அதிலும் சுவிஸில் உள்ள கழகத் தோழர்களுடன், ஏனைய தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டது அனைவரின் உணர்வையும் வெளிப்படுத்துவதாகவும், அடுத்த வருடம் வழமை போல் முன்கூட்டியே அறிவித்து, கலைநிகழ்வுடன் பிரமாண்டமாக நடத்துவோம்" எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் நிகழ்வாக, "பொதுச்சுடரினை" புளொட் அமைப்பின் மட்டுநகர் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்து, தற்போது சுவிஸில் வாழும் தோழர்.சித்தா அவர்கள் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து அமைப்புகளின் சார்பான ஈகைச்சுடர்களை ரெலோ அமைப்பின் தோழர் விமல், புலிகளின் தீவிர ஆதரவாளரான திரு.சுதர்ஷன், ஈ.பி.டி.பி அமைப்பின் தோழர்.யசி, பொது அமைப்புகளின் சார்பில் திரு.பொலிகை ஜெயா ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

இதனைத் தொடந்து "விடுதலைப் போராட்டத்தில் மரணித்த அனைத்துக் கழகத் தோழர்கள், அனைத்து அமைப்புகளின் போராளிகள், பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வாக" கலந்து கொண்ட அனைத்து மக்களினாலும் சுடரேற்றப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வினைத் தொடர்ந்து அனைவரினாலும் இருநிமிட மௌன அஞ்சலியுடன் உரை நிகழ்வு ஆரம்பமாகியது.

முதலாவதாக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சித்தார்த்தன் அவர்களின் அறிக்கையினையை, சுவிஸ்ரஞ்சன் அவர்கள் வாசித்தார். மேற்படி அறிக்கையில், "தற்போதைய நாட்டின் சூழ்நிலைகளின் யதார்த்த சூழ்நிலை குறித்தும், எதிர்கால செயல்பாடு குறித்தும், வீரமக்கள் தின நிகழ்வின் அவசியம் குறித்தும்" விரிவாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக நோர்வேயில் இருந்து "நோர்வே ராஜன்" அவர்கள் தொலைபேசி மூலம் கருத்துத் தெரிவித்து இருந்தார். அவரது கருத்தில் "அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து குறிப்பிட்ட ஏதாவது நாளொன்றை எடுத்து, அத்திகதியில் அனைவருக்குமான நினைவு தினத்தைக் கொண்டாடுவதே சிறப்பென எமது தலைவர் சித்தார்த்தர் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அனைத்து மக்களும் சிந்திக்க வேண்டுமெனவும் குறிப்பட்டதுடன், இம்முறை வீரமக்கள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், மட்டுநகர், அம்பாறை, மலையகம் என்று பல பகுதிகளையும் உள்ளடக்கி "புளொட் ஐரோப்பிய ஒன்றியம்" சார்பாக கவிதை போட்டி நிகழ்வு நடத்தியது குறித்தும் அவர்களுக்கான பரிசில்கள் குறித்தும்" விபரித்தார்.

இதனைத் தொடர்ந்து பொது அமைப்புகளின் சார்பில், கம்யூனிஸ்ட்வாதியும், பேச்சாளருமான திரு.பொலிகை ஜெயா அவர்கள் உரையாற்றுகையில் "இவ்வீரமக்கள் தின நிகழ்வை எளிமையாகவும், மிக நேர்த்தியாகவும் சிறப்பான முறையில் நடத்துவது நன்றாக உள்ளதெனவும், அதேவேளை அனைத்து அமைப்புகளும் பொதுநோக்கின் அடிப்படையில் ஒரேகுடையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டுமெனவும்", பல தத்துவார்த்தக் கருத்துக்களுடன் உரையாற்றி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையை ஆரம்பித்தவர்களில் ஒருவரும், பின்னர் ஒருவருடமாக "மனிதம்" செயற்பாட்டாளராக இருந்தவரும் தற்போது சுவிஸ் நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான "சோசலிஷக் கடசியின்" சொலோத்தூண் மாநில செயற்பாட்டாளர்களில் ஒருவராக உள்ள திரு.சுதாகரன் உரையாற்றி இருந்தார்.

அவர் தனதுரையில் "தனக்கு சரியென்றுபடுவதை நேரடியாக சொல்வதினாலேயே பலரும் தன்னை விரோதியாக பார்ப்பதாகவும், அப்படிப் பார்க்கும் சிலரின் தவறான பிரச்சாரங்களே தமக்கு ஆதரவைக் கூட்டித் தந்ததாகவும், ஆரம்பத்தில் புளொட் சுவிஸ்கிளையை ஆரம்பித்த போதும், அதில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் அதில் இருந்து வெளியேறி "மனிதம்" அமைப்பை உருவாக்கிய போதிலும், அங்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் எனது கருத்தை நேரடியாக சொல்ல முடியாத சூழ்நிலையில் அதிலிருந்தும் வெளியேறினேன். 

நான் சென்ற வருடம் ரெலோவின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டேன், இன்று புளொட் அமைப்பின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன். இன்று ஓரளவாது ஜனநாயக சூழ்நிலை தோன்றி இதுபோன்ற அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இதேவேளை புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்களின் அறிக்கையில் யதார்த்தமான உண்மை நிலைகளை பகிரங்கத்தில் தெரிவித்து உள்ளார் என்பதும் பாராட்டுக்குரியது" எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ரெலோ அமைப்பின் சார்பில் தோழர்.ஞானம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "தனது கடந்த கால ரெலோ,  புளொட் உறவுகள், வாழ்க்கைகள் குறித்தும் விபரித்ததுடன், யதார்த்த சூழ்நிலைகள் குறித்தும்" விபரித்தார்.

இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன், மதிய போசனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது. 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய