காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் 
யாழில் ஒரு இனிய  மகிழ்வான மாலைப்பொழுது எனும் பாராட்டுவிழா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள  பிள்ளையார் இன் ஹோட்டலில் எதிர்வரும்  10 9 2019 செவ்வாய்க்கிழமை   மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறும்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகில  தலைவர் வி. சு துரைராஜா முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு இயக்கத்தின் துணைத் தலைவர் தே. செந்தில்வேலவர் தலைமை தாங்குவார்.

விழாவில் ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்தர் சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பிரதம அறங்காவலர் செஞ்சொற்செல்வர்
ஆறுதிருமுருகன் ஆகியோர் வழங்குவர்.

இந்த பாராட்டு விழா நிகழ்வில்  வாழ்த்துரைகளை உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் அகில பொதுச்செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம்,   வடபகுதி ஊடகவியலாளர் அமைப்பு மற்றும் யாழ் ஊடக மையம் ஆகியவற்றின் பிரதம ஒருங்கிணைப்பாளர் எஸ். தயாபரன்,  யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் துணை முதல்வருமான செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன்,  இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜெர்மன் நாட்டு கிளையின் தலைவர்
இ. இராஜசூரியர்,  இயக்கத்தின் இலங்கை கிளையின் தலைவர்  அ. சத்தியானந்தன்,
இயக்கத்தின் ஆஸ்திரேலியா நாட்டின் கிளை தலைவர்  ந. இ. விக்கிரமசிங்கம், 
டான் தொலைக்காட்சி சேவையின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளர்
எஸ். முகுந்தன்,
இயக்கத்தின் நோர்வே நாட்டின் தலைவர்  எஸ் . தியாகலிங்கம் 
உட்பட பலரும் வாழ்த்துரை வழங்குவார்கள்

ஏற்புரை
யை விழா நாயகன் என். வித்யாதரன் வழங்க நன்றியுரையை உலகத்தமிழ்ப்பண்பாட்டியக்கத்தின் இலங்கை கிளையின் செயலாளர்  எஸ். பிரசாந்தன் நிகழ்த்துவார்.

Comments

popular posts

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

தேசிய காங்கிரசிடம் உதவி கேட்கும் முஸ்லிம் பெருங்கட்சிகள்.