Skip to main content

நமது தனியார் சட்டத்தை ஒரு கேலிக்குரிய விடயமாக்கி, பல்வேறு விமர்சனங்களுக்குள் அதனை உள்ளாக்கி இருப்பது மிகுந்த மன வேதனையை தருகின்றது

10% முஸ்லிம்கள் வாழும் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டில் நம் முன்னோர்கள் செய்த பங்களிப்பு,  ஷரீயா சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முஸ்லிம் விவாக விவாகரத்துச்  சட்டம் 1951 யில் இலங்கையில் நமக்கென உருவானது. அல்ஹம்துலில்லாஹ்.
தற்போது நாட்டில்  இருக்கும் சூழ்நிலையில் இந்தச் சட்டத்தை மேலும் வலுவாக்கும் முயற்சியில் நாம் இறங்குவதா, இல்லை, மாறாக  தம் சுய நலன்களுக்காக நாமே அதனை வீழ்த்துவதா? 

இலங்கையில் நடை முறையில் இருக்கும் கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் போன்ற அனைத்து தனியார் சட்டங்களிலும் மாத்திரமல்லாது பொதுச் சட்டத்திலும்  கூட நிர்வாக ரீதியான குறைபாடுகள் இருப்பது யாவரும் அறிந்ததே! ஆனால், நமது  புதிய, நவீன  “சீர்திருத்தவாதிகள்” சிலர்  அவர்களது தனிப்பட்ட பிழையான புரிந்துகொள்ளலாள் நமது தனியார் சட்டத்தை ஒரு கேலிக்குரிய  விடயமாக்கி, பல்வேறு விமர்சனங்களுக்குள் அதனை உள்ளாக்கி இருப்பது மிகுந்த மன வேதனையை தருகின்றது.

மார்க்கத்தை கற்றரிந்த உலமாக்கள், புத்திஜீவிகள், அறிஜர்கள், போன்றோரின் கருத்துக்கள் அனைத்தும் முடக்கிவிப்பட்டு, அரை குறை புரிதலுடன் முரண்பாடான கருத்துக்களை பரப்பும் சிலருடன் தான் இந்நாட்டின் இன வாத, பிரித்தாளும் கொள்கையை கொண்ட ஊடகங்களும் கை கோர்த்துள்ளனர்.

நமது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டமானது ஷரீயா சட்டத்தை அடிப்படையாக கொண்டது. ஷரியா என்பது புனித குர் ஆன், சுன்னா, இஜ்மா, கியாஸ் அடிப்படையில் நான்கு முக்கியமான இமாம்களான ஷாபி, ஹனபி, ஹம்பல், மாலிக் ஆகியவர்களால் தொகுத்து உருவாக்கப்பட்டது.
இதனை மாற்றும் அளவிற்கு இந்த இமாம்களுக்கு நிகரான தகுதியுடைய அறிஜர்கள் நம் மத்தியில் யார் இருக்குறார்கள்?

இந்த நவீன “சீர்திருத்தவாதிகள்” தங்களது அரை குறை புரிந்து கொள்ளலால், யானையைப் பார்த்த குருடர்களின் கதை போன்று, ஷரீயாவை மாற்றத்திற்கு உள்ளாக்கக் கூடிய ஒரு வெறும் சட்டமாக கருதுகிறார்கள். மாறாக, ஒரு தனி நபர் தன் வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஒரு வழி முறை இது,  என்பதை இந்த நவீன “சீ” னாவாதிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான பெரும் இமாம்களால் நெறிப்படுத்தப்பட்டு,  காலம் காலமாக எம் சமுதாயத்தை, நெறிப்படுத்தி வரும்
ஒரு வாழ்க்கை வழி முறையில் மாற்றம் கொண்டு வரும் படி கோரி எங்களது நவீன “ சீர்திருத்தவாதிகள்” உடன் இணைந்திருக்கும் பேரினவாத பெண்களுக்கு இது பற்றிப் பேச என்ன தகுதி இருக்கின்றது என நான் கேட்க விரும்புகிறேன்.

இறுதியாக, நமது சீர்திருத்தவாதிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்: நீங்கள் கோரும்
மாற்றங்கள், மார்க்க சம்பந்தமானவை. 1400 வருடங்களுக்கு மேற்பட்ட, அல்லாஹ்வினால் அருளப்பட்ட ஒரு வழி முறையை மாற்றுவதற்கோ, சீர் திருத்துவதற்கோ எவருக்கும் அதிகாரம் இல்லை. நிர்வாக சம்பந்தமான மாற்றங்களை நமது உலமாக்களுடன் சேர்ந்து அவர்களது அறிவுரைகளை ஏற்று அதற்கேற்ப அமுல்படுத்துங்கள்.

இவ்வாறான மாற்றங்களை இலங்கை முஸ்லிம் சமூகம் அங்கீகரிகரிக்கும் நிர்ப்பந்தம் உருவானால்,பிறகு மார்க்கத்தின் அடிப்படை உரிமைகளை இதே போன்று இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைகள் உருவாகி விடும்.  ஏற்கனவே நமது உரிமைகள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு பறி போகும் நிலையில், புதிய உரிமைகளுக்காக போராடுவதை விட இருக்கின்ற உரிமைகளை விட்டுக் கொடுப்பது ஆபத்தான ஒன்றாகும்.
உங்களது இந்த “மாற்றம் தேவை” கோரிக்கையின் விளைவால், முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனியான சட்டம் அவசியம் தானா? ஒரு நாடு:ஒரு சட்டம்  என்ற கொள்கையை அமுல்படுத்தக் கோரி எழும் கோஷங்கள் இன்று அதிகரித்து வருகின்றன. ஆகவே, எதிர்கால அபாயங்களை கருத்தில் கொண்டு, அல்லாஹ்வை பயந்து, நம் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வோமாக.
Maryam Naleerdeen

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s  Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of the   London based Global Peace Institute (GPI)   which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI  Founder President Nawaz Rajabdeen’s  contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI  Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to  promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” sa

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் ! சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை !! நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் !!! ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் !!!! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ