தென்கிழக்குப் பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் துறைத்தலைவர்களில் ஒருவராக சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ்!!!


எம்.வை.அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதற்தொகுதி மாணவராக இணைந்து கல்விகற்று பின்னர் 2003 ஆம் ஆண்டு இதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக தனது பணிகளைப் ஆரம்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர் அகமதுலெப்பை ஹனீஸ், 2019.07.18 ஆம் திகதி முதல் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணித விஞ்ஞான பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய ஆரம்பக்கல்வியை அட்டாளைச்சேனை அல் முனீரா வித்தியாலயம் மற்றும் கண்டி அசோகா வித்தியாலயம் போன்றவற்றில் ஆரம்பித்த ஹனீஸ், இரண்டாம்நிலைக் கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியிலும் பல்கலைக்கழக கல்வியை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பயின்று கணணி விஞ்ஞான துறையில் சிறப்புப் பட்டத்தை பெற்றிருந்தார்.
முதுமாணிப் பட்டத்தை இந்தியா பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், M Tech பட்டத்தை பூர்த்தி செய்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ், அதே பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தையும் பெறவுள்ளார்.
2011 ஆம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்ற ஹனீஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவி நிலைகளிலும் பணியாற்றியுள்ளார். இதில் குறித்த பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவை வடிவமைப்பதில் முன்னின்று செயற்பட்டிருந்தார்.
பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளிலும் சமூக சேவையிலும் துடிப்புடன் செயற்பட்டு வரும் ஏ.எல்.ஹனீஸ், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவர், சக்காத் நிதியத்தின் தலைவர் மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர் போன்ற பதவிகளிலும் கடமையாற்றியுள்ள  இவர், அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தில் சிரேஷ்ட ஆலோசகராகவும் அட்டாளைச்சேனை பாத்திமா அரபிக் கல்லூரியின் தலைவராகவும் கடமையாற்றி வருகிறார்.
அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக்கொண்ட ஹனீஸ்,மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஐ.அகமதுலெப்பை (AD) எம்.எம்.பதூருன்நிஷா ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார். வைத்திய கலாநிதிகளான ஹரீஸ், ஹமீஸ் மற்றும் ஹனீஸா ஆகியோரின் சகோதரரான இவர்
அரச கால்நடை வைத்தியர்  டஹானாவை கரம்பிடித்து, ஆயிஷா அனீகா, அக்தாஸ் அஹமட் மற்றும் அக்யஸ் அஹமட் ஆகிய  மூன்று  குழந்தைகளுக்கு தந்தையுமாவார்

Comments

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி சைரீன் இனாம் மெளலானா இந்தோனேசியாவில் தங்கப்பதக்கம் வென்று எம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி – சஜித் தலைவர் – சம்பிக்க பிரதித் தலைவர்