Skip to main content

சிறுபிள்ளை திருமணம் முஸ்லிம்களின் ஏகபோக உரிமையா?



இலங்கையின் இனவாத ஊடகங்களும், படித்தவர்களும் பாமரர்களும், வயது வித்தியாசமின்றி ஏதோ முஸ்லிம்கள் எல்லோரும் 10 வயது 15 வயது சிறுமிகளை திருமணம் முடிப்பதாக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் சிறுமிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டி அவர்கள்  படுகின்ற கஷ்டங்கள் எண்ணிலடங்காது. சொல்லி மாளாது.

இலங்கையில் சிறு பிள்ளைகளை யார் அதிகம் திருமணம் செய்து இருக்கிறார்கள்? முஸ்லிம்கள் மட்டும் தானா சிறுபிள்ளைகளை திருமணம் செய்திருக்கிறார்கள்? இவைகளுக்கெல்லாம் விடைகளை தருகிறது 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இலங்கையின் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பை பார்க்கும் போது இவர்களது இந்த கண்ணீர் வெறும் முதலைக் கண்ணீர்தான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இவர்களது இந்த வாதமெல்லாம் வெறும் காழ்ப்புணர்ச்சிதான், முஸ்லிம்கள் மீது கொண்ட வெறுப்பு தான் என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. முஸ்லிம் பெண்களது திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பவர்கள் இதையும் கொஞ்சம் கவனித்தால் நாட்டிலே நல்ல பல விஷயங்கள் நடக்கும்.முஸ்லிம் பெண்களை காப்பாற்றுவதற்கு முதல், காப்பாற்றப்பட வேண்டிய பல பெண்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும்.

இந்த 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 3530 பேர் திருமணம் செய்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பெண்கள். அவர்களுள் 3204 பெண் பிள்ளைகள் சட்டப்படியான பதிவுத் திருமணத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் 2,200 பேர் (69%) சிங்களவர்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 471(14%). எஞ்சிய 14 வீதமானவர்கள் தமிழர்கள் மற்றும் பரங்கியர்கள். 18 வயதிற்கு குறைந்தவர்கள் திருமணம் முடிப்பதற்கு இஸ்லாத்தில் மட்டும்தான் அல்லது முஸ்லீம்களுக்கு மட்டும்தான் என்றால் இந்த 2200 பேரும் எங்கிருந்து வந்தார்கள்? இதுதவிர 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்  326 பேர் சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுள் 216 பேர் சிங்களவர்கள்(66.2%). முஸ்லிம்கள் வெறும் 23 பேர்(7%) மாத்திரமே. ஒரு நாட்டிலே ஒரு நீதி என்றால் எப்படி சம்பிரதாய முறைப்படி இந்த 216 பேர் திருமணம் செய்தார்கள்? இது எப்படி சாத்தியமானது?

15 ‌‌தொடக்கம் 19 வயது வரை உள்ள சிறுவர்கள்  104 176 பேர் திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்களுள் பெண் பிள்ளைகள்  85,392 பேர் இருக்கிறார்கள். இதிலே 87 ஆயிரத்து 233 பேர் சட்டப்படி திருமணத்தை பதிவு செய்திருக்கிறார்கள். இப்படி சட்டப்படி திருமணத்தை பதிவு செய்தவர்களுள் 62 ஆயிரத்து 630 பேர் சிங்களவர்கள்(71.5%). ஆனால் முஸ்லிம்கள் 11 ஆயிரத்து  916 மாத்திரமே (13%). மீதி 15 வீதமானவர்கள் மற்ற இனத்தவர்கள். இவர்களும் சட்டப்படி பதிவு திருமணம் செய்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆக இந்த நாட்டிலே 18 வயதுக்கு குறைந்த அதிகளவான சிறுவர்-சிறுமியர்கள் திருமணம் முடித்து இருப்பது முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருந்து தான். ஆனால்  இந்த நாட்டிலே முஸ்லிம்கள் மாத்திரம் தான் சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதாக ஊடகங்களிலே பாசாங்கு செய்கிறார்கள். பெண்ணுரிமை போராளிகளே சிறுவர்கள் மீது அன்பு கொண்டவர்களே முஸ்லிம் பெண்களை காப்பாற்ற புறப்பட்டவர்கள் இப்பொழுது உங்கள் வாய்க்கொழுப்பு சீலையால் வடிகிறது அதை துடைத்துக் கொள்ளுங்கள்! முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள் அதன் பின் முஸ்லிம்களை திருத்திக் கொள்ளலாம்.

பிற் குறிப்பு இதிலே திருமணம் செய்யாமல் கூடிவாழ்வவர்கள், சின்னவீடு செட்டப் செய்து இருப்பவர்கள், யௌவன காலத்தில் ஆண் நண்பர்களோடு பாலியல் உறவு கொள்பவர்கள், கள்ளத் தொடர்பில் இருப்பவர்கள், பாய் ஃபிரண்ட் கேர்ள் பிரண்ட் என்று அலைபவர்கள் யாருமே உள்ளடக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்.  அவைகளையும் உள்ளடக்கி இருந்தால் கணக்கு வேறு மாதிரி இன்னும் ஒரு படி மேலே இருந்திருக்கும்.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவ நிபுணர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை.

LET'S TALK ABOUT CHILD MARRIAGE IN SRILANKA

(ALL FIGURES ARE TAKEN FROM NATIONAL CENSUS OF POPULATION 2012)

 As of 2012, there were a total of 104,176 married citizens (registered & customary) between the ages of 15-19. Also, 3530 of those married were below 15‼️
When looking at gender breakdown, all 3530 married who are below 15 years of age are female. 85,392 of the 104,176 married citizens between ages of 15-19 are female too.

Looking at those married through “Registered Marriage” by Ethnicity.
There were a total of 3204 citizens aged BELOW 15 married this way, out of which 2200 (69%) were of SINHALESE ethnicity‼️😲 In contrast, only 471 was Sri Lankan Moor

Also through “Registered Marriage”,
There were a total of 87,633 citizens aged between 15 - 19 years married this way, of which 62630 were Sinhalese (71.5%)‼️ In contrast, 11,916 (13.6%) were Sri Lankan Moor.

When looking at statistics of “Customary Marriage

There were a total of 326 citizens of age BELOW 15 married this way, out of which 216 are Sinhalese‼️ Only 23 were Sri Lankan Moor.
For age 15 - 19, thr is a total of 16,543, out of which 11,446 are Sinhalese‼️

As we can see, Sri Lanka does have citizens married below 18 (and officially recorded in the census). However, an overwhelming majority of them are SINHALESE.
Media & Politicians have gone into overdrive painting a negative image on the Muslims in the country...‼️
Look at the below link, it clearly indicates how the prescription changes are made by media..
Does the picture relates with the story??

https://roar.media/english/life/reports/child-marriage-in-sri-lanka

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s  Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of the   London based Global Peace Institute (GPI)   which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI  Founder President Nawaz Rajabdeen’s  contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI  Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to  promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” sa

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் ! சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை !! நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் !!! ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் !!!! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ