சாய்ந்தமருது நகர சபைக்கான அமைச்சரவைப் பத்திரம் தயார்..

!

-எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி. அறிவிப்பு

சாய்ந்தமருதுக்கு நகர சபை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாராகவுள்ளது என்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் அவரது தலைமையில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது தோடம்பழ சுயேட்சைக்குழு, முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு என்பவற்றின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி. மேலும் கூறியதாவது;

"கல்முனையை நான்காக பிரிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பின்னர், தமிழ்த் தரப்புடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தமிழ்த்தரப்பு அவர்களுடைய முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதேபோன்று நாங்களும் எங்களது முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கிறோம். அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் இதுதொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றோம்.

நானும், தலைவர் ரவூப் ஹக்கீமும், றிஷாத் பதியுதீனும் பிரதமரின் ஏற்பாட்டில் அமைச்சர் வஜிர அபேவர்தனவை சந்தித்து கல்முனை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினோம். இந்தப் பேச்சுவார்தையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. எங்களது தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிப்பதற்காக அவர் கூறியுள்ளார். விரைவில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படுவதற்கான உத்தரவாதத்தை அவர் தந்திருக்கிறார்.

சாய்ந்தமருதுக்கு நகரசபை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாராகவுள்ளது. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலக பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர், கல்முனையை நான்காக பிரித்து சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும். இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றும் ஒரே நேரத்தில் தீர்வு காணப்படும்" என்றார்.

@
Aslam S.Moulana

Comments

popular posts

எட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு!

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது

மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.