சாய்ந்தமருது விரைவில் நிறைவுக்கு வரும் - ஹக்கீம்சாய்ந்தமருது மக்களுக்காக அவர்களின் கோரிக்கை குறித்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன் விரைவில் நிறைவுக்கு வரும் என நம்புகிறேன் என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இன்று தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட பள்ளிவாசல் பிரதிநிதிகள், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மற்றும் தோடம்பள உறுப்பினர்களுடனான இடம்பெற்ற பரஸ்பர புரிந்துணர்வு சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எச் எம் எம் ஹரீஸ் உட்பட முஸ்லீம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் யஹ்யாகான், ஏ.எல்.எம்.புர்கான், முன்னாள் மாநகர உறுப்பினர்கள் பஷீர், நிஸார்தீன் மற்றும் பாமி, முபாரக் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. கல்முனை பிரச்சினை முடிவுக்கு வருகிற ஏக காலத்தில் சாய்ந்தமருது மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் என முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள் தலைவரை வலியுறுத்தினர்.
கல்முனை செயலகம் சம்பந்தமாகவும் இங்கு விரிவாக பேசப்பட்டது, கல்முனை விடயத்துக்கு என்னாலான சகல ஒத்துழைப்புகளையும் நான் வழங்குவேன், கால எல்லைகள் குறித்து நிச்சயமாக எதுவும் சொல்ல முடியாது இருப்பினும் முயற்சிப்போம் எனவும் தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டார். சுமூகமான முறையில் இந்த சந்திப்பு நடந்தது.

Comments

popular posts

எட்டியாந்தோட்டை சம்பவம்; மஹிந்த அதிரடி உத்தரவு!

காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது

மொத்தமாக 4 நியமனங்கள் ஜனாதிபதி யால் வழங்கப்பட்டது.