சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்த வேண்டாம் - ஞானசார தேரர் காட்டம்


( மினுவாங்கொடை நிருபர் )

   சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க   வேண்டும் எனவும், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
   நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
   சவூதிக்கு வேண்டியவாறு இந்த நாடு செயற்படத் தேவையில்லை. சவூதியின் செல்வாக்குக்கு  உட்பட்டு, இந்த நாடு இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும்.
   முஸ்லிம்களின் வாக்குகளுக்கு ஆசைப்பட்டு, இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் செயற்பட வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கின்றேன் என்றும், தேரர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
   இம்மாநாட்டை நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்  கடந்த 14 ஆம் திகதி  கண்டி தலதா மாளிகைக்குச் சென்று, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ் பகுதி 4 மாடி கட்டடமொன்றில் தீ..

20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது. அவர்களுக்கே ஓய்வூதியமும் வழங்கப்படும்- அனுர குமார