கடந்த 12 மாத காலப்பகுதியில் 2 இலட்சத்து 21,000 தொழில் வாய்ப்புகள்( ஐ. ஏ. காதிர் கான் )

   கடந்த 12 மாத காலப்பகுதியில் 2,21,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக,  அரச புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
   2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டுப்  பகுதியில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33.5 சத வீதத்தில் இருந்து 34.9 சத வீதமாக அதிகரித்தது. இதே போன்று,  ஆண்களின் எண்ணிக்கை 73.4 சத வீதமாக அதிகரித்துள்ளது.
   ஆண்களில் தொழில் அற்றோரின் எண்ணிக்கை,  கடந்த வருடத்தில் இரண்டு சத வீதமாக அதிகரித்தது.
இதேவேளை,  பெண்கள் தொழிலற்றோர் எண்ணிக்கை 7.4 சத வீதத்தில் இருந்து 6.9 சத வீதமாகக்  குறைந்துள்ளது. சேவை தொழிற்துறை 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 12 மாத காலப் பகுதிகளில் தொழில் வாய்ப்புக்கள் 2,52,502 ஏற்படுத்தப்பட்டுள்ளது.
   விவசாய தொழிற்  துறையில் ஈடுபட்டோர் எண்ணிக்கை விழச்சி கண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டை அண்டிய முதல் காலாண்டுப் பகுதியில் 52.0 சத வீதத்தில் இருந்து 52.6 சத வீதமாக அதிகரித்துள்ளது.

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா