( மினுவாங்கொடை நிருபர் )
புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளில், அகில இலங்கை ரீதியில் பெறப்படுகின்ற சிறந்த பெறுபேறுகள் சம்பந்தமாக அறிவிக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது சம்பந்தமாக அறிவிக்காதிருக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், குறித்த பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களை, தேசிய ரீதியாகத் தரப்படுத்துவதைக் கைவிடுவதற்கும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தீர்மானித்துள்ள நிலையில்,
அமைச்சரின் இத்தீர்மானத்திற்கு ஆசிரியர் சங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் தேசிய தரப்படுத்தல் வெளியிடப்படமாட்டாதென கல்வியமைச்சர் (14) வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் குறித்த தீர்மானம் வரவேற்கத்தக்கதென, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரின் இத்தீர்மானம் உடன் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமெனவும், இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment