மரண தண்டனையைக்கூட ஏற்க தயார்'! - என் சமூகத்தை பழிதீர்க்காதீர்!!


' Grate leader
மரண தண்டனையைக்கூட ஏற்க  தயார்'! -   என் சமூகத்தை பழிதீர்க்காதீர்!! சபையில் ரிஷாட் உருக்கம்.

* வாக்குவேட்டைக்காக இனவாதிகள் முஸ்லிம் மக்களின் நெஞ்சைப் பிளக்கின்றனர். இனவாதத்தைக் கக்குகின்றனர்.

* தலதாமாளிகைக்கு முன்னால் மூன்று முஸ்லிம் இளைஞர்களை நேற்று  காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இதுதான் தர்மமா?

* முஸ்லிம் பெண்களுக்கு பஸ்களில் ஹிஜாப் அணிந்துகொண்டு செல்லமுடியவில்லை. அவர்களை அவமானப்படுத்துகின்றனர்.  எதற்காக இப்படியெல்லாம்?

* மினுவாங்கொடையில் முஸ்லிம் மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கி, வர்த்தக நிலையங்களை தீயிட்டுக்கொளுத்தியவர்களுக்கு பிணை வழங்கப்படுகின்றது.

ஆனால், கப்பலின் சுக்கான் பொறிக்கப்பட்ட ஆடையை தர்ம சக்கரம் எனக்கூறி கைதுசெய்த நோயாளித் தாயை 21 நாட்கள் சிறையில் வைத்தீர்கள் . இதுதான் சட்டம் ஒழுங்கா?

* எங்களுக்கே தெரியாமல் உலகப் பயங்கரவாதம் உள்நுழைந்துவிட்டது. அதை அழித்தொழியுங்கள். அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றோம். அப்பாவி முஸ்லிம் மக்களை புனித ரமழான் மாதத்தில் தண்டிக்கவேண்டாம்.

* நான் எவ்வித குற்றச்சாட்டுகளிலும் ஈடுபடவில்லை. ஆதாரங்கள் இருந்தால் அவற்றை  சி.ஐ.டியிடம் ஒப்படையுங்கள்.

குற்றமிழைத்துள்ளேன் என்றால் மரணதண்டனையையும் ஏற்க தயாராகவே இருக்கின்றேன். மாறாக என்னைக்காட்டி என் சமூகத்தை பழிதீர்க்க வேண்டாம்.

- ரிஷாட் பதியுதீன் எம்.பி.-
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி...........
R.Sanath

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !