BREAKING NEWS

ஆசைகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும்! –வர்தகசங்க தலைவர் முபாறக்.

ஆசைகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும்! –வர்தகசங்க தலைவர் முபாறக்.
எம்.வை.அமீர்-
நோன்பு மனிதர்களது ஆசைகளை கட்டுப்படுத்த சிறந்த பயிற்சியை வழங்குகின்றது  என்றும்  ஆசைதான் அநேக அனர்த்தங்களுக்கு அடிப்படையாக அமைவதாகவும் இந்த விடயத்தை  அனைவரும் சாதாரணமாக உணர்ந்துகொள்ள முடியும் என்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் பிரபல வர்த்தகரும் சமூக சிந்தனையாளருமான அல் ஹாஜ் எம்.எஸ்.எம்.முபாறக் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகசங்கம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இப்தார் நிகழ்வு லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றபோது நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட 24 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மஹிந்த முதலிகே நிகழ்வுக்கு பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல் பண்டாரநாயக்க மற்றும் அம்பாறை மாவட்ட விஷேட அதிரடிப்படைகளின் கட்டளைத்தளபதி ஆர்.ஏ.ஏ.கே.ரத்நாயக்க ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மதத்தலைவர்கள், கல்முனை மாநகர முதல்வர் உள்ளிட்ட அரசியல்வாதிகள், பாதுகாப்புத்துறை சார்ந்த அதிகாரிகள், அரச அதிகாரிகள்சிவில் சமூகத் தலைவர்கள்ஊடகவியலாளர்கள்வர்த்தக பிரமுகர்கள்  என பலரும் குழுமியிருந்த குறித்த சபையில் தொடர்ந்து உரையாற்றிய வர்த்தக சங்கத்தலைவர்,
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பின் இறுதிப்பகுதியில் உள்ளம் நொந்த நிலையில், அனைவரையும் ஒருங்கே சந்திப்பதற்குக் கிடைத்த வாய்ப்பைத் தந்த வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்
ரமழான் என்கிற இந்தமாதமானது முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அதிகமான நன்மைகளைச் சம்பாதிக்கக்கூடிய ஒரு மாதமாக கருதப்படுகிறது. பசித்தும்தாகித்தும் இருப்பதனூடாக ஏழைகளின் பசியை உணரக்கூடியதையும் அதிக தான,தர்மங்கள் செய்யக்கூடிய பக்குவத்தையும் இந்தமாதம் வழங்குகின்றது. என்றும் பொறுமை சகிப்புத்தன்மை போன்ற பாடங்களையும் கற்றுத்தரும் மாதமாகவும் திகழ்கின்றது. என்றும் விஞ்ஞான ரீதியாக நோக்கும் போது ஹாபர்ட் பல்கலைக்கழகமும் WHOஎனப்படும் சர்வதேச சுகாதார அமைப்பும் நோன்பு நோற்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பட்டியலிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுகர் நோயாளிகளுக்கு அற்புதமான நிவாரணம் இருப்பதாகவும் இதய நோய்க்கும் புற்றுநோய்க்கும் கூட ஆச்சரியமான நிவாரணங்கள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளதாக தகவல்களை  வெளியிட்டுள்ளனர் என்றும் நோன்பு நோற்பதால் உடலியல் ரீதியில் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும் பல கல்வியாளர்கள் ஆராச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர் என்றும் ஒரு கல்வியாளர் நோன்பு தொடர்பில் ஆராய்ந்து அண்மையில் நோபல்பரிசைகூட பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகளும் தீவிரப்போக்குக் கொண்டோரும் ஆசையின் காரணமாகவே நாட்டில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றார்கள் என்பது சாதாரண மக்களும் அறிந்த உண்மையாகும். என்று தெரிவித்த முபாறக்,
இஸ்லாம் மனிதகுலத்துக்குத் தேவையான அநேக விடயங்களை கூறிக்கொண்டிருக்கும்போது சில ஊடகங்கள் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கின்றன என்றும்  தான் கூறுவதெல்லாம் அவர்கள் கூறுவதை விடுத்து இஸ்லாத்தைப்பற்றி தேடுங்கள் என்பதுதான்என்றும் உரையாற்றினார்.
இந்த நிகழ்வை தான்சமாதானத்துக்கான ஒன்றுகூடலாகவே பார்ப்பதாகவும் இங்கு கூடியிருக்கும் வர்த்தகப் பிரமுகர்களும் ஏனையோரும் எதிர்பார்ப்பது சமாதானத்தைத்தான் என்றும் இதற்காக தாங்கள்  என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தெளிவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு முஸ்லிம் அல்லாத நிறைய சகோதர்கள் குழுமியிருகின்றீர்கள் தயவுசெய்து எங்களது சமாதானத்துக்கான செய்தியை உங்களது சமூகம் சார்ந்தோருக்கு எத்திவைக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் ஒற்றுமையே பலம், அதனூடாகவே சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியம். அவ்வாறேதான் தான் தனது  தந்தையின் சிறந்த வழிகாட்டலின் காரணாமாக இவ்வாறானதொரு நிலைக்கு வந்தேன் என்பதைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar