தங்கம் கடத்தி வந்த இந்தியர்கள் கட்டுநாயக்கவில் கைது( மினுவாங்கொடை நிருபர் )

   தங்கம் கடத்தி வந்த குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜைகள் ஆறு  பேர் இலங்கை சுங்க அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்
வெள்ளிக்கிழமை(21) சென்னையிலிருந்து 6E1204 எனும் விமானத்தில் இலங்கை வந்த பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்களிடமிருந்து 10 இலட்சம் ரூபா (ரூ.1,015,920) பெறுமதியான 169.32 கிராம் நிறை கொண்ட 13 தங்கக் கட்டிகள் மற்றும் 388.8 கிராம் நிறை கொண்ட பூரணமாக்கப்படாத ஆறு தங்கக் கட்டிகள் உள்ளிட்ட மூன்று மில்லியன் ரூபா  பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பதில் பணிப்பாளர் நாயகமுமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
   இது தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

மாணவியா்கள் முஸ்லீம் பாடசாலை பா்தா தலைக்கவசம் 600 ருபா