சமய சமூக பயிற்சி பட்டறையும் பொதிகள் வழங்கும் நிகழ்வும்!


எம்.வை.அமீர்,யூ.கே.காலித்தீன்-
ஸீறா பௌண்டேசன் ஏழாவது வருடமாக ஏற்பாடு செய்திருந்த சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கத்தீப் மற்றும் முஅத்தீன் மார்களுக்கான  சமய சமூகம் சார்ந்த பயிற்சி பட்டறையும் பொதிகள் வழங்கும் நிகழ்வும் 2019.06.02ஆம் திகதி மாளிகைக்காடு சாலிஹீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
அமைப்பின் ஒருங்கிணைப்பு செயற்பாட்டாளர் யூ.கே. காலித்தீன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வுக்கு வளவாளராக அஷ்செய்க் ஏ.எச்.நௌசாத் (இஹ்சானி) அவர்கள் கலந்துகொண்டு கத்தீப் மற்றும் முஅத்தீன் மார்களின் மேன்மை பற்றியும் சமகாலத்தில் அவர்கள் ஆற்றவேண்டிய பங்கு பற்றியும் கருத்துரைகள் வழங்கினார்.
அஷ்செய்க் நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி) அவர்களது வழிகாட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா, சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சங்கத்தலைவர் எம்.எம்.சலீம் (சர்க்கி), கத்தீப் மற்றும் முஅத்தீன் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஆதம்பாவா (ரசாதி), மாளிகைக்காடு சாலிஹீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ.ஏ.அப்துல் கபூர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் கத்தீப் மற்றும் முஅத்தீன் மார்களுக்கு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

Comments

popular posts

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !