கொழும்பில் பல பகுதிகளுக்கு இன்று 12 மணித்தியால நீர்வெட்டு( மினுவாங்கொடை நிருபர் )

   கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (26)  நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதற்கமைய,  இன்று முற்பகல் 9 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய,  ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொடை, ஹோமாகம, மீபே, மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக,  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்  சபை அறிவித்துள்ளது.
   நிலக்கீழ் நீர்க்குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே குறித்த நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Comments

popular posts

சற்றுமுன் தம்புள்ளையில் விபத்து

சற்றுமுன் கொழும்பு கோல் பேஸ் பகுதி 4 மாடி கட்டடமொன்றில் தீ..

20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது. அவர்களுக்கே ஓய்வூதியமும் வழங்கப்படும்- அனுர குமார